ETV Bharat / sports

கால்பந்து: ரியல் மேட்ரிட் அசத்தல் வெற்றி - Benzem,a

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் பில்போ அணியை வீழ்த்தியது.

கால்பந்து: ரியல் மேட்ரிட் வெற்றி
author img

By

Published : Apr 23, 2019, 12:02 AM IST

ஸ்பெயனின் லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் - அத்லெடிக்

பில்போ அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் அட்டாக்கிங் முறையில் விளையாடிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தவறியதால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி 0-0 என்ற சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து, இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே, ரியல் மேட்ரிட் அணியின் ஸ்ட்ரைக்கர் கரீம் பென்சிமா ஹெட்டர் முறையில் அணியின் முதல் கோலை அடித்தார். பின்னர், ரியல் மேட்ரிட் அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தால் அத்லெடிக் பில்போ அணி கோல் அடிக்க முடியாமல் போனது.

இதைத்தொடர்ந்து, 77ஆவது நிமிடத்தில் ரியல் மேட்ரிக் அணிக்கு கிடைத்த கார்னர் கிக்கை, பென்சிமா மீண்டும் ஹெட்டர் முறையில் கோலாக மாற்றினார். பென்சிமா இப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததால் ரியல் மேட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அத்லோடிக் பில்போ அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மேட்ரிட் அணி இந்தத் தொடரில் விளையாடிய 33 போட்டிகளில் 20 வெற்றி, 4 டிரா 9 தோல்விகள் என 64 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.