ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று (டிச. 31) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி - எல்ச் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே ரியல் மாட்ரிட் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தது. இதன் பயணாக ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்திலேயே அந்த அணியின் லுகா மோட்ரிக் கோலடித்து அசத்தினார்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்ச் அணிக்கு ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதனைச் சரியாகப் பயன்படுத்திய அந்த அணியின் ஃபிடல் சாவ்ஸ் கோலடித்து அணியைத் தோல்வியிலிருந்து மீட்டார். பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்கத் தவறின.
-
🏁 FP: @ElcheCF 1-1 @RealMadrid
— Real Madrid C.F. (@realmadrid) December 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
⚽ Fidel (p) 52'; @lukamodric10 20'#Emirates | #HalaMadrid pic.twitter.com/yGEV05ygCo
">🏁 FP: @ElcheCF 1-1 @RealMadrid
— Real Madrid C.F. (@realmadrid) December 30, 2020
⚽ Fidel (p) 52'; @lukamodric10 20'#Emirates | #HalaMadrid pic.twitter.com/yGEV05ygCo🏁 FP: @ElcheCF 1-1 @RealMadrid
— Real Madrid C.F. (@realmadrid) December 30, 2020
⚽ Fidel (p) 52'; @lukamodric10 20'#Emirates | #HalaMadrid pic.twitter.com/yGEV05ygCo
இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரியல் மாட்ரிட் அணி 33 புள்ளிகளை மட்டும் பெற்று லாலிகா புள்ளிப்பட்டியலின் 2ஆம் இடத்தில் நீடித்துவருகிறது. இப்பட்டியலில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 35 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெல்போர்ன் வெற்றியைப் பாராட்டிய சோயிப் அக்தர்!