ETV Bharat / sports

திட்டமிட்டபடி ஃபுட்சல் கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் - இந்திய கால்பந்து கூட்டமைப்பு! - இந்திய கால்பந்து கூட்டமைப்பு

இந்தியாவின் ஐஎஸ்எல், ஐ-லீக், இரண்டாம் பிரிவு லீக் கால்பந்து அணிகள் பங்கேற்கவுள்ள ஃபுட்சல் கிளப் சாம்பியன்ஷிப்(Futsal Club Championship) தொடர் திட்டமிட்டபடி 2020-21 சீசனில் நடைபெறுமென இந்திய கால்பந்து கூட்டமைப்பு(AIFF) அறிவித்துள்ளது.

AIFF's inaugural Futsal Club Championship to kickstart 2020-21 season

author img

By

Published : May 15, 2020, 9:57 PM IST

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றன. மேலும் இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டும், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும் உள்ளன.

இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், இந்தியாவின் உள்ளூர் கால்பந்து தொடர்களான ஐஎஸ்எல், ஐ-லீக், இரண்டாம் பிரிவு கால்பந்து அணிகளைக் கொண்டு ஃபுட்சல் கிளப் சாம்பியன்ஷிப் தொடரை இந்தாண்டு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்சமயம் உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தின் போது, ஃபுட்சல் கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் முதலாவது சீசன் திட்டமிட்டப்படி தொடங்கப்படும் என்றும், ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெறுவதாக இருந்த இத்தொடர் தற்போது செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் சுனாந்தோ தார் (Sunando Dhar) கூறுகையில், "ஃபுட்சல் கிளப் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் தொடக்க சீசன் திட்டமிட்டபடி இந்தாண்டு நடத்தப்படும். ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலையை பொறுத்து இத்தொடர் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நடத்த முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.எல், ஐ-லீக், இரண்டாம் பிரிவு கால்பந்து அணிகள் என பத்து அணிகள் பங்கேற்கவுள்ள இத்தொடரில், கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எஃப்சி, ஒடிசா எஃப்சி, எஃப்சி கோவா, கோகுலம் கேரளா, ஐஸ்வால் எஃப்சி, ராஜஸ்தான் எஃப்சி, முகமதியன், ஆரா எஃப்சி உள்ளிட்ட அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் ரத்தானால் பிசிசிஐக்கு 4,000 கோடி ரூபாய் இழப்பு நேரிடும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.