ETV Bharat / sports

ஃபிஃபா கவுன்சில் உறுப்பினாராக இந்தியர் நியமனம்!

கோலாலம்பூர்: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா கவுன்சில் உறுப்பினாராக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் பிரஃபுல் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஃபிபா கவுன்சில் உறுப்பினாராக இந்தியர் நியமனம்
author img

By

Published : Apr 6, 2019, 4:58 PM IST

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரஃபுல் படேல், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா(FIFA) கவுன்சில் உறுப்பினாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏஎஃப்சி கால்பந்து பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஃபிஃபா கால்பந்து கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயலர் குஷல் தாஸ், பிரஃபுல் படேல், மூத்த துணை தலைவர் சுப்ரதா தத்தா, உள்ளிட்ட எட்டு பேர் போட்டியிட்டனர். அதில், பிரஃபுல் படேல் 46 வாக்குகளில் 38 வாக்குகளைப் பெற்றதால், ஃபிஃபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம், ஃபிஃபா கவுன்சில் உறுப்பினாராக இந்தியர் ஒருவர் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். ஆசிய கண்டத்தில் இருந்து ஃபிஃபா கவுன்சில் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினர்களில் பிரஃபுல் படேலும் ஒருவர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபிஃபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கு தேர்வாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கால்பந்து விளையாட்டை ஆசிய கண்டம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வலுப்படுத்த கடுமையாக போராடுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.