ஹைதராபாத்: ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக தென்ஆப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கூறப்பட்டது.
1990 முதல் 2005 வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய இவர் தலைசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் தனது அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகள், 189 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டாலும், அவர் மிடில் ஆடரில் களம் இறங்கி பேட்டிங்கிலும் கலக்கி உள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 1990 ரன்களும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 942 ரன்களும் அடித்து உள்ளார்.
இதையும் படிங்க: Ind Vs Ire 3rd T20 : இறுதி ஆட்டத்திலும் வெல்லும் முனைப்புடன் இந்தியா! அயர்லாந்து தாக்குபிடிக்குமா?
ஆல்ரவுண்டரான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 216 விக்கெட்களையும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 239 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக 2005ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின் ஒய்வை அறிவித்தார். மேலும், இவர் ஜிம்பாப்வே, வங்கதேச, ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் லயின்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் பரவி வந்தன. அதேநேரம், அவர் உயிருடன் தான் உள்ளார் என்றும் நலமாக இருப்பதாகவும் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா கூறி உள்ளார்.
இதையும் படிங்க: டி.என் சாம்பியன்ஸ் சார்பில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கல்!