ETV Bharat / sports

WTC FINAL: நாள் முழுவதும உள்ளே வெளியே ஆட்டம்; நங்கூரமிட்டு நிற்கும் கோலி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது‌. இந்திய அணி 64.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்துள்ளது.

WTC FINAL MATCH 2nd day UPDATE
WTC FINAL MATCH 2nd day UPDATE
author img

By

Published : Jun 20, 2021, 5:00 AM IST

சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் செஷன்

முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி மதிய உணவு இடைவெளி வரை 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்தது. புஜாரா பூஜ்யத்திலும், கோலி 6 ரன்னிலும் போட்டியின் இரண்டாம் செசனை தொடங்கினர்.

36ஆவது பந்தில் முதல் ரன்

மிக மிகப் பொறுமையாக ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா தான் சந்தித்த முதல் 35 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தான் சந்தித்த 36ஆவது பந்தில் (வாக்னர் பந்துவீச்சு) பவுண்டரி அடித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தன்னுடைய ரன் கணக்கை தொடங்கினார். அடுத்தும் வாக்னர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தொடர்ச்சியாக அதிர்ச்சியளித்தார்.

கோலி புதிய மைல்கல்

மறுமுனையில் கோலி ஆட்டத்தில் 10 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் 7,500 ரன்களை கடந்து பெரும் மைல்கல்லை எட்டினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 42ஆவது டெஸ்ட் வீரர் என்ற பெருமையும், இந்தியாவில் ஆறாவது வீரர் என்ற பெருமையையும் கோலி அடைந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை போலவே கோலி, தன்னுடைய 154ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புஜாரா அவுட்

இரண்டு பவுண்டரிகளை தவிர்த்து, ஒரு ரன்னைக் கூட எடுக்காமல் புஜாரா நியூசிலாந்து பவுலர்களுக்கு போக்கு காட்டி வந்தார். ஆனால், அது நீண்டநேரம் நீடிக்கவில்லை. 54 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த புஜாரா போல்ட் வீசிய 41ஆவது ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார்.

கேப்டனுக்கு துணையாக துணை கேப்டன்

சவுத்தி, போல்ட் என அத்தனை பந்துவீச்சாளர்களையும் அசால்டாக சமாளித்த விளையாடினார் கோலி. பவுண்டரிகளை அடிக்க முயன்று வேகமான ஆட்டத்தை வெளிக்காட்டாமல், சிங்கிள்ல் மூலமாகவே ரன்களைச் சேர்த்து வந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற ரஹானேவும் மிகக்கவனமாக விளையாடி வந்தார்.

ஆட்டம் மெதுவாக நகர்ந்துவந்த நிலையில் சவுத்தி 56ஆவது ஓவர் வீசிய போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக தேநீர் இடைவேளை விடப்பட்டது. தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 55.3 ஓவர்களில் 3 வி்க்கெட்கள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது முறை நிறுத்தம்

தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. ஆனால், ஆட்டத்தின் 58.4 ஓவரின் போது மீண்டும் வெளிச்சம் குறைவாக இருந்ததால், ஆட்டம் நிறுத்தப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். அப்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்துள்ளது. கோலி 40 ரன்களுடனும், ரஹானே 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மீண்டும் உள்ளே - வெளியே

வெளிச்சம் சீரான பின்னர், மீண்டும் இரு அணி வீரர்களும் களத்திற்கு அழைத்தனர்‌. இம்முறை 65ஆவது ஓவரை போல்ட் வீசிக் கொண்டிருக்க மீண்டும் வெளிச்சம் குறைந்து காணப்பட்டதால் மீண்டும் போட்டி தடைப்பட்டது. இதனால் வீரர்கள் மீண்டும் ட்ரேசிங் ரூமுக்கு (dressing room) திரும்பினர்.

இதன்பின்னர், இன்றைய ஆட்டம் இத்தோடு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் (64.4 ஓவர்கள்) இந்தியா மூன்று விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா தரப்பில் விராட் கோலி 44(124) ரன்களுடனும், ரஹானே 29(79) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமீசன், வாக்னர், பவுல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.