ETV Bharat / sports

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

IND Vs AUS Women's Cricket 1st ODI: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

AUS W VS IND W
AUS W VS IND W
author img

By PTI

Published : Dec 28, 2023, 6:40 PM IST

Updated : Dec 28, 2023, 10:50 PM IST

மும்பை: ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 1 டெஸ்ட் போட்டி மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் விளையாடி வருகின்றது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் என்ற வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (டிச.28) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷஃபாலி வர்மா களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தியது. ஷஃபாலி வர்மா 1, ரிச்சா கோஷ் 21, ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்கள் என வெளியேறினர். இதனைத் தொடர்ந்து, சிறுதி நேரம் நீடித்தது யாஸ்திகா பாட்டியா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூட்டணி. ஒரு கட்டத்தில் அரைசதம் நெருங்கிய யாஸ்திகா 49 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து தீப்தி சர்மா 21, அமன்ஜோத் கவுர் 20 ரன்களும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 82 ரன்களில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. பூஜா வஸ்த்ரகர் 62 ரன்களிலும், ரேணுகா தாக்கூர் சிங் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆஷ்லே கார்ட்னர் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் தலா 2 விக்கெட்டுகளும், மற்ற பந்து வீச்சாளர்களான டார்சி பிரவுன், மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் அலனா கிங் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கியது ஆஸ்திரேலியா அணி.

தொடக்க வீரரான அலிசா ஹீலி டக் அவுட் ஆனார். ஆனால், அதனைத் தொடர்ந்து ஃபோப் லிட்ச்ஃபீல்ட் - எல்லிஸ் பெர்ரி கூட்டணி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், 148 ரன்கள் சேர்ந்த கூட்டணியை திப்தீ சர்மா பிரித்தார். எல்லிஸ் பெர்ரி 9 ஃபோர் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 75 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து, 78 ரன்களில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட், சினே ராணா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

பின்னர் பெத் மூனி 42 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 68 ரன்களும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 46.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: முதல் டெஸ்ட்; ஆட்டமிழந்த டீன் எல்கர்.. தென் ஆப்பிரிக்கா அணி 147 ரன்கள் முன்னிலை!

Last Updated : Dec 28, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.