ETV Bharat / sports

New Zealand Vs Sri Lanka : வாழ்வா? சாவா? கடும் நெருக்கடியில் நியூசிலாந்து! - உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup Cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இலங்கையை நாளை (நவ. 9) நியூசிலாந்து எதிர்கொள்கிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 3:36 PM IST

பெங்களூரு : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் நேற்று (நவ. 7) மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அரைஇறுதி சுற்றுக்குள் நுழையும் 4வது அணியை தேர்வு செய்யும் ஆட்டமாக நாளை (நவ. 9) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடையிலான ஆட்டம் காணப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில், புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும்.

அதேநேரம் இலங்கை அணியை பெரிய ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியால் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ஏனெனில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பில் இன்னும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அணிகளையும் தாண்டி அரைஇறுதி சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி பெற வேண்டுமென்றால், நாளை (நவ. 9) நடைபெறும் வாழ்வா? சாவா? லீக் ஆட்டத்தில் பெரிய மார்ஜினுடன் வெற்றி பெற்றாக வேண்டும். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா முழு உடற்தகுதியுடன் உள்ளார்.

அதேபோல் கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பி இருப்பது நியூசிலாந்துக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. உலக கோப்பை தொடர் தொடங்கிய வேகத்தில் முதல் நான்கு ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு அதன்பின் வந்த நான்கு ஆட்டங்களும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கடைசியாக பாகிஸ்தான் என நியூசிலாந்து அணிக்கு தொடர் தோல்விகள். அதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு மிக மோசமாக அமைந்தது. முதல் இன்னிங்சில் பேட்ஸ்மேன்கள் 401 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தாலும், பந்துவீச்சாளர்களால் பாகிஸ்தான் வீரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

25 ஓவர்களுக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 200 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். டிரென்ட் போல்ட், இஷ் சோதி, கிளென் பிலிப்ஸ் என மும்முனை தாக்குதல் நடத்திய போதிலும் பாகிஸ்தான் வீரர் பக்கர் சமான் எளிதாக அவர்களை கையாண்டு சதம் விளாசினார். பந்துவீச்சிலும் நியூசிந்து அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்த ஆட்டத்தில் அவர்களுக்கு நிச்சயம் வெற்றி தான்.

அதேநேரம், இலங்கை அணியை பொறுத்தவரை வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஆட்டம், அந்த அணிக்கு நல்லதாக அமையவில்லை. 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. அரைஇறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிய இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க : ஒரு ஆட்டத்தில் ஓராயிரம் சாதனைகள்! - அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெலின் சாதனை பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.