ETV Bharat / sports

Virat Kohli: சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த விராட் கோலி! - சச்சின்

Virat Kohli New Record: இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை மிக குறைந்த இன்னிங்ஸில் கடந்த வீரர் என்ற புதிய சாதனைய படைத்துள்ளார்.

விராட் கோலி
Virat Kohli
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 10:09 PM IST

ஹைதராபாத்: ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி இலங்கை கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் அடித்தார். மேலும், இந்த இன்னிங்ஸில் கோலி விளையாடி கொண்டிருக்கும் போது அவர் 13,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அவர் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கர்காரா, ரிக்கி பாண்டிங், சானாத் ஜெயசூர்யார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர் மிக குறைந்த இன்னிங்ஸில் 13,000 ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு 8000, 9000, 10000, 11000, 12000 ரன்களை அதிவேகமக கடந்த வீரரும் விராட் கோலி தான். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்கையில் 77வது சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் 47 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் மற்றும் டி20 1 சதங்கள் என ஒட்டுமொத்தமாக 77 சதங்கள் அடித்து சச்சினுக்கு அடுத்தபடியாக உள்ளார்.

விராத் கோலியின் சாதனைகள்

ஆசிய கோப்பையில் அதிக சதங்கள்: விராட் கோலி 4 சதங்களை அடித்து ஆசிய கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முன்னதாக இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா 6 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

  • Virat Kohli in ODIs 🤯

    Fastest to 8000 runs
    Fastest to 9000 runs
    Fastest to 10,000 runs
    Fastest to 11,000 runs
    Fastest to 12,000 runs
    Fastest to 13,000 runs (today)#PAKvIND | #AsiaCup2023 | More on his record 👇

    — ICC (@ICC) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குறைந்த இன்னிங்ஸில் 13000 ரன்கள்: நேற்று வரை முதல் இடத்தில் இருந்த சச்சின் 13,000 ரன்களை கடக்க எடுத்து கொண்ட போட்டிகள் 321. ஆனால் விராட் கோலியோ 267 போட்டிகளில் 13,000 கடந்து புதிய சாதனை படைத்து சச்சினை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்: விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13,024 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். முன்னதாக சச்சின் (18,426), குமார் சங்கர்காரா (14,234), ரிக்கி பாண்டிங் (13,704), சனத் ஜெயசூரியா (13,430) ரன்களுடன் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்: இதுவரை விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 77 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார். முன்னதாக சச்சின் 100 சதங்களை விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

  • A monumental achievement today as @imVkohli crosses the 13,000-run mark in ODIs! Your unwavering commitment and exceptional consistency in the game make you a true cricketing legend. Keep those runs flowing and continue making us proud! 🇮🇳 pic.twitter.com/qS1UIZXEa4

    — Jay Shah (@JayShah) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்து சச்சின் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி கூடிய விரைவில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்தியா அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது வருத்தமே - உலக கோப்பை அணி குறித்து நடராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.