லண்டன் (இங்கிலாந்து): ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடரானது, உலகப்பிரசித்தி பெற்றது. 2021-2022 ஆஷஸ் தொடர், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஆஷஸ் தொடர் நடத்தப்படுகிறது.
நான்கு மாத சுற்றுப்பயணம்
வரும் டிசம்பர் 8ஆம் தேதி அன்று தொடங்கும் ஆஷஸ் தொடர், 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஷஸ் தொடருக்கு, வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி, தொடர்ந்து நான்கு மாதங்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
வீரர்கள் கண்டனம்
இந்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில், இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி கிடையாது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பிற்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாகக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறிய நிலையில், இதற்கு இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் மைக்கெல் வாகன், கெவின் பிட்டர்சன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஆஷாஸ் தொடரே வேண்டாம்
இதுகுறித்து இங்கிலாந்து மூத்த வீரரான மைக்கெல் வாஹன் தனது ட்விட்டர் பக்கத்தில்,'ஆஷஸ் சுற்றுப்பயணத்தின்போது இங்கிலாந்து வீரர்களின் குடும்பத்தினருக்கு அனுமதியில்லை என்ற தகவலை அறிந்தேன். அப்படி அனுமதிக்க இயலாது என்றால், ஆஷாஸ் தொடரை நடத்தவே வேண்டாம். நான்கு மாதங்கள் குடும்பத்தினரை பிரிந்து இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என பதிவிட்டுள்ளார்.
குடும்பமே பிரதானம்
இத்தகவலை குறித்து வெகுண்டெழுந்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்," தங்கள் குடும்பத்தினரை அனுமதிக்க மறுப்பதினால், இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் தொடரில் இருந்து விலகினால் அவர்களுக்கு என் முழு ஆதரவு உண்டு.
வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு, அதுவும் தற்போதைய கரோனா சூழலில் அவர்கள் குடும்பம்தான் துணை நிற்கும். ஆதலால் இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: WTC FINAL: முடிந்தது இந்திய இன்னிங்ஸ்; நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு!