அடிலெய்டு: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதிவருகின்றன. முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அந்த வகையில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 32 பந்துகளுக்கு 54 ரன்களை குவித்தார்.
அதேபோல மிட்செல் மார்ஷ் 30 பந்துகளுக்கு 45 ரன்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 21 பந்துகளுக்கு 25 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளையும், ஃபசல்ஹக் பாரூக்கி 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர். 169 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்