டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய சூப்பர் 12 போட்டியில், இந்தியா - வங்க தேச அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தின் முடிவில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேலும் விராட் கோலி இந்த ஆட்டத்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார். டி20 உலகக்கோப்பையில் 25 போட்டிகளில் ஆடியுள்ள கோலி 1,065 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 31 போட்டிகளில் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவன் ஜெயவர்த்தனேவின் சாதனையை (1,016 ரன்கள்) முறியடித்துள்ளார்.
இவர்களையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் (956), இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா (921) மற்றும் இலங்கை அணியின் தில்ஷன் (897) ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை டி20: இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி!