ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்! பிளேயிங் 11இல் தினேஷ் கார்த்திக்?

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பி இருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் பிளேயிங் 11இல் இடம் கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

author img

By

Published : Jun 8, 2022, 9:24 AM IST

dinesh karthik
தினேஷ் கார்த்திக்

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. நாளை (ஜூன்9) முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் , பெங்களூரு அணிக்கு விளையாடிய தினேஷ் கார்த்திக் முக்கியமான தருணங்களில் அபாரமாக பினிஷிங் செய்து வெற்றியை தேடி தந்தார், 190க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டும் இருந்ததால் டி 20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு பிசிசிஐ அவரை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்தது.

சாஸ்திரியின் பிளேயிங் 11: கே.எல்.ராகுல் தலைமையிலான பிளேயிங் 11இல் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்குமா என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ராகுல் , இஷான் கிஷன் , ரிதுராஜ் கேக்வாத் , ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்ட்யா , அக்‌ஷர் பட்டேல் , புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் , ஹர்ஷல் பட்டேல் , உம்ரான் மாலிக் / அர்ஷ்தீப் சிங்.

சாஸ்திரியின் பிளேயிங் 11இல் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைக்கவில்லை, ஆனால் இதில் மாற்றங்கள் இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். தோனி விட்டுச் சென்ற பினிஷர் ரோலை அனுபவம் வாய்ந்த வீரரால் தான் நிரப்ப முடியும் என்று நம்புகின்றனர். இஷான் கிஷன் , தினேஷ் கார்த்திக் , ரிஷப் பந்த் மூவரும் விக்கெட் கீப்பர்கள்; ஆதனால் ஒரே ஆட்டத்தில் மூவரையும் களமிறக்குவது சிரமம்.

ஃபார்மை கருத்தில் கொண்டு தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், ரிதுராஜ் கேக்வாத் , ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்ட்யா , தினேஷ் கார்த்திக் , புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் , உம்ரான் மாலிக் , குல்தீப் யாதவ் பிளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.