ETV Bharat / sports

மகளிர் டி20 சேலஞ்ச்: டிஃபெண்டிங் சாம்பியன் சூப்பர்நோவாசை சமாளிக்குமா வெலாசிட்டி! - ஸ்மிருதி மந்தனா

மகளிருக்கான டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டிஃபெண்டிங் சாம்பியனான சூப்பர்நோவாஸ் அணியை எதிர்த்து வெலாசிட்டி அணி ஆடவுள்ளது.

womens-t20-challenge-invincible-supernovas-eye-third-straight-title

author img

By

Published : Nov 4, 2020, 3:53 PM IST

நான்கு போட்டிகளைக் கொண்ட மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் மூன்று அணிகள் பங்கேற்கின்றன. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியும் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றின்போது நடக்கும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடர், மூன்றாவது ஆண்டு போட்டிகள் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் டிஃபெண்டிங் சாம்பியனான சூப்பர்நோவாஸ் அணியை, வெலாசிட்டி அணி எதிர்கொள்ளவுள்ளது.

கடந்த ஆண்டு டி20 சேலஞ்ச் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர், இந்த ஆண்டில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூப்பர்நோவாஸ் அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ப்ரியா புனியா, இலங்கை அணியின் சமாரி அட்டப்பட்டு, சசிகலா சிரிவர்தன, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ் என நட்சத்திர வீராங்கனைகள் உள்ளதால், பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெலாசிட்டி அணி
வெலாசிட்டி அணி

மறுமுனையில் வெலாசிட்டி அணியில் கேப்டன் மிதாலி ராஜ், இளம் நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா, இங்கிலாந்து நட்சத்திர வீராங்கனை டேனியல் வியாட், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷஃபாலி வர்மாவைப்போல் இந்த ஆண்டு வெலாசிட்டி அணியில் இடம்பெற்றுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த அனகா முரளி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ஒரே நேரத்தில் பிக் பேஷ் மகளிர் தொடர், மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் ஆகியவை நடக்கிறது. இதனால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டுமே மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

டிஃபெண்டிங் சாம்பியன் சூப்பர்நோவாசை சமாளிக்குமா வெலாசிட்டி

மேலும் முதல்முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கு என்று பிரத்யேகமாக ஜியோ நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிரிக்கெட்டர் ஸ்மிருதி மந்தனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.