ETV Bharat / sports

T20 WORLDCUP: ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி - T20 WORLDCUP MATCHES

டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் நாளான நேற்று (அக். 17) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றிபெற்றன.

T20 WORLDCUP,  ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி
T20 WORLDCUP
author img

By

Published : Oct 18, 2021, 8:21 AM IST

ஓமன்: ஐசிசி ஏழாவது டி20 உலகக்கோப்பைத் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இந்தத் தொடர் ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறுகின்றன.

தகுதிச்சுற்றுப் போட்டிகள் வரும் அக்டோபர் 22ஆம் தேதி நிறைவடையும் நிலையில், அடுத்த 'சூப்பர் - 12' சுற்று அக்டோபர் 23ஆம் தேதி தொடங்குகின்றன.

பப்புவா நியூ கினியா படுதோல்வி

இந்நிலையில், நேற்று நடைபெற்ற (இந்திய நேரப்படி மாலை 3.30) முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் பப்புவா நியூ கினியா, ஓமன் அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஐசிசி தொடர்களில் பப்புவா நியூ கினியா அணி விளையாடிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 20 ஓவர்கள் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அசாத் வாலா 56 (43), சார்லஸ் அமினி 37 (26) ரன்களை எடுத்தனர். ஓமன் பந்துவீச்சில், ஜீஷன் மகசூத் 4 விக்கெட்டுகளையும், பிலால் கான், கலீமுல்லா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, களமிறங்கிய ஓமன் அணி தொடக்க வீரர்கள் அகிப் இலியாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அரைசதம் கடந்து 13.4 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து, பப்புவா நியூ கினியா அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.

இலியாஸ் 50 ரன்களுடனும், ஜதிந்தர் 73 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மகசூத் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

தடுமாற்றமும், மீட்சியும்

பின்னர், நேற்று மாலை 7.30 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம், ஸ்காட்லாந்து அணியைப் பேட்டிங் செய்ய பணித்தது.

இதன்பின்னர், பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 12 ஓவர்களில் 53 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிறிஸ் கிரீவ்ஸ் - மார்க் வாட் இருவரும் அடுத்து 50 ரன்களைச் சேர்த்தனர். இதனால், ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை எடுத்தனர்.

கடைசி ஓவர் த்ரில்லர்

வங்கதேச அணி பந்துவீச்சில் மகேதி ஹாசன் மூன்று விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹாசன், முஸ்தபிஷூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆனால், வங்கதேச அணியின் பேட்டர்கள் தொடக்கத்திலிருந்து தடுமாறிவந்தனர். மிடில் ஆர்டரில் முஷ்பிகுர் ரஹீம் 38 (36) ரன்களையும், ஷகிப் அல் ஹாசன் 20 (28) ரன்களையும் சேர்த்தனர்.

முன்வரிசை பேட்டர்கள் மிகவும் நிதானமாக விளையாடியதால், பின்வரிசை வீரர்கள் அதிரடியைக் காட்ட வேண்டியிருந்தது. இதனால், கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வங்கதேச அணி 17 ரன்களை மட்டும் எடுத்தது.

இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாகப் பேட்டிங் செய்து திருப்புமுனை ஏற்படுத்திய கிறிஸ் கிரீவிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றையப் போட்டிகள்

உலகக்கோப்பைத் தொடரில் இன்று (அக். 18) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. அதே மைதானத்தில், இலங்கை - நமீபியா அணிகள் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

மேலும், துபாய் ஐசிசி அகாதமி மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது (அனைத்தும் போட்டிகளும் இந்திய நேரப்படி குறிப்பிடப்பட்டுள்ளது).

இதையும் படிங்க: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.