ETV Bharat / sports

ஐபிஎல் தொடர் முக்கியமல்ல - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் தொடரை விட நாட்டிற்காக விளையாடுவதுதான் முக்கியம் என மூத்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

கபில் தேவ், Kapil dev
கபில் தேவ்
author img

By

Published : Nov 8, 2021, 5:17 PM IST

டெல்லி: ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் -12 சுற்றுப்போட்டிகள் இன்றுடன் (நவ. 8) நிறைவடையும் நிலையில், நாளை மறுதினம் (நவ. 10) முதல் அரையிறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் பெற்று தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் படுதோல்வியைடந்தது. இதனால், இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

கபில்தேவ் கவலை

இந்நிலையில், மூத்த கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ், இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்," இந்திய அணி வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது நம்மால் என்ன சொல்ல முடியும்?. வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதை பெருமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிசிசிஐ திட்டமிட வேண்டும்

நான் ஐபிஎல் போட்டியில் விளையாடக்கூடாது என்று கூறவில்லை, நாடுதான் முதன்மையானது அதன் பின்னரே ஐபிஎல் என கூறுகிறேன்.

வருங்காலங்களில் பிசிசிஐ முறையாக போட்டிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும். இதுபோன்ற தொடர்களில் ஏற்படும் தவறுகளில் இருந்து ஏற்படும் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி, நமீபியா அணியுடன் இன்று மோதுகிறது. இப்போட்டியில், இந்திய அணி தனது பிளேயிங் லெவனில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: T20 WORLDCUP: தென் ஆப்பிரிக்கா வெற்றியால் அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.