நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி அன்று நிறைவுபெறுகிறது. அதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7ஆம் தேதி அன்று நிறைவு பெறுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு முறையே கேப்டன், துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ராகுல் டிராவிட், இந்திய ஆடவர் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25ஆம் தேதியும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3ஆம் தேதியும் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (நவம்பர் 12) அறிவித்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கலந்துகொள்கிறார். இதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி: ரஹானே (முதல் டெஸ்டுக்கு கேப்டன்), கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், புஜாரா (துணை கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஹா (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஆர். அஸ்வின், அக்ஷர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இதையும் படிங்க: NDIA'S T20 SQUAD: கேப்டனாகும் ரோஹித்; துணைக்கு ராகுல்!