கொழும்பு (இலங்கை): இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடரைச் சமநிலைப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜூலை 29) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
இலங்கை அணியில், இசுரு உடானாவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக பதும் நிசங்கா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய தரப்பில் நவ்தீப் சைனி நீக்கப்பட்டு அறிமுக வீரர் சந்தீப் வாரியர் இடம்பெற்றுள்ளார்.
-
India skipper Shikhar Dhawan has won the toss and elected to bat in the final #SLvIND T20I 🏏 pic.twitter.com/I162vqVuZd
— ICC (@ICC) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India skipper Shikhar Dhawan has won the toss and elected to bat in the final #SLvIND T20I 🏏 pic.twitter.com/I162vqVuZd
— ICC (@ICC) July 29, 2021India skipper Shikhar Dhawan has won the toss and elected to bat in the final #SLvIND T20I 🏏 pic.twitter.com/I162vqVuZd
— ICC (@ICC) July 29, 2021
பிளேயிங் XI
இலங்கை அணி: தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, சதீரா சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, பதும் நிசங்கா, அகிலா தனஞ்செய, துஷ்மந்தா சமீரா.
இந்திய அணி: ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிகல், நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், ராகுல் சஹார், குல்தீப் யாதவ், , சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி.
இதையும் படிங்க: IND vs SL: ஒன்றரை ஆண்டு பசியை தீர்க்குமா இலங்கை; தேறுமா இந்திய அணி