ETV Bharat / sports

IND VS SL: இலங்கை 275 ரன்கள் குவிப்பு, இந்தியா மோசமான ஆட்டம் - IND VS SL

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சாரித் அசலங்கா ஆகியோரின் அரை சதத்தால் இலங்கை அணி 275 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி 12 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.

IND VS SL
IND VS SL
author img

By

Published : Jul 20, 2021, 8:54 PM IST

Updated : Jul 20, 2021, 10:21 PM IST

கொழும்பு (இலங்கை): இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று (ஜூலை 20) நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.

இதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா - மினோத் இணை களம் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 77 ரன்களைக் குவித்தது.

இலங்கை பேட்டிங்

இந்நிலையில், சஹால் வீசிய 14ஆவது ஓவரில், மினோத் பானுகா 36 (42) ரன்களிலும், பானுகா ராஜபக்ஷ ரன்னேதும் இன்றியும் அவுட்டாகி வெளியேறினர். அரைசதம் அடித்த கையோடு அவிஷ்கா, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். மிகவும் பொறுமையாக ஆடிவந்த தனஞ்செய டி சில்வா, ஒரு பவுண்டரி உள்பட 32 (45) ரன்களில் தீபக் சஹாரிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து, கேப்டன் ஷனாகா 16 (24) ரன்களிலும், வஹிந்து ஹசரங்கா 8 (11) ரன்களிலும் முறையே சஹால், சஹார் ஆகியோரின் பந்துவீச்சில் தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இலக்கு நிர்ணயம்

அதன்பின் சாமிகா கருணாரத்ன-அசலங்கா இணை அணியின் ஸ்கோரை சற்று அதிகரித்தது. இறுதிகட்டத்தில், அசலங்கா 65 (68), சமீரா 2 (5) ரன்களிலும், சந்தகன் ரன்னேதும் இன்றியும் அவுட்டாக, இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் 276 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு பிருத்வி ஷா வழக்கம்போல் அதிரடி தொடக்கத்தை அளித்தார். கசுன் ரஜிதா வீசிய முதல் ஓவரின் கடைசி மூன்று பந்துகளை பவுண்டரி பறக்கவிட்டார். தினேஷ் சமீராவின் அடுத்த ஓவரில் தவான் தன் பங்கிற்கு மூன்று பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.

தொய்வான தொடக்கம்

முதல் இரண்டு ஓவர்களில் 26 ரன்களை இந்திய குவித்துவிட, அவர்களைக் கட்டுப்படுத்த பேட்டிங் பவர்- பிளேயில் சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா பந்துவீச வந்தார். இதன் பலனாக, பிருத்வி ஷா 13 (10) ஹசரங்கா பந்தில் போல்டாகி வெளியேறினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய இஷான், இன்று 1 (2) ரன்னில் நடையைக் கட்டினார்.

இதன்பின் களமிறங்கிய மனீஷ் பாண்டே, கேப்டன் தவான் உடன் கைக்கோத்து நிதானமாக ஆடினார். இந்நிலையில், ஹசரங்கா தவானை 29 (38) ரன்களில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றி அதிர்ச்சியளித்தார்.

கிடைக்குமா பாட்னர்ஷிப்

இதன்மூலம், இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்து திணறிவருகிறது. இலங்கை அணி தனது 12ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TNPL 2021: சென்னை vs திருப்பூர்; சென்னை பந்துவீச்சு

Last Updated : Jul 20, 2021, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.