ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியுடன் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியாவில் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று (மே 17) அறிவிக்கப்பட்டுள்ளது.
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக் , ரீஸா ஹென்ட்ரிக்ஸ் , கிளாஸன் , கேசவ் மகாராஜ், மார்க்கரம் , டேவிட் மில்லர் , லுங்கி நிகிடி, வெயின் பார்னல் , டுவைன் பிரிடோரியஸ் , அன்ரிச் நோர்ட்ஜே , ரபாடா , ஷம்ஸி , மார்கோ ஜான்ஸன் , ரஸி வான் டெர் டுசென் மற்றும் தென் ஆப்பிரிக்கா டி 20 சேலஞ்சர் தொடரில் அற்புதமாக விளையாடிய டிரிஸ்டான் ஸ்டப்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
PROTEAS SQUAD ANNOUNCEMENT ⚠️
— Cricket South Africa (@OfficialCSA) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tristan Stubbs receives his maiden call-up 💪
Anrich Nortje is back 👌
India, here we come 🇮🇳
Full squad 🔗 https://t.co/uEyuaqKmXf#INDvSA #BePartOfIt pic.twitter.com/iQUf21zLrB
">PROTEAS SQUAD ANNOUNCEMENT ⚠️
— Cricket South Africa (@OfficialCSA) May 17, 2022
Tristan Stubbs receives his maiden call-up 💪
Anrich Nortje is back 👌
India, here we come 🇮🇳
Full squad 🔗 https://t.co/uEyuaqKmXf#INDvSA #BePartOfIt pic.twitter.com/iQUf21zLrBPROTEAS SQUAD ANNOUNCEMENT ⚠️
— Cricket South Africa (@OfficialCSA) May 17, 2022
Tristan Stubbs receives his maiden call-up 💪
Anrich Nortje is back 👌
India, here we come 🇮🇳
Full squad 🔗 https://t.co/uEyuaqKmXf#INDvSA #BePartOfIt pic.twitter.com/iQUf21zLrB
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா, ஜடேஜா , விராட் கோலி , ராகுல் , பும்ரா உள்ளிடோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: SRH vs MI: ஹைதராபாத் பிளே ஆஃப் கனவு பலிக்குமா..?