சூரத்: முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 18ஆம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் நேற்று (டிச.06) நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் இந்தியன் கேபிடல்ஸ் அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன.
இதில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியன் கேபிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியன் கேபிடல்ஸ் அணி குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்துக்கும் - கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், போட்டியின் முடிவுக்கு பிறகு ஸ்ரீசாந்த், இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் "எவ்வித காரணமும் இல்லாமல் சக வீரரான மற்றும் அனைவரிடமும் சண்டை போடக்கூடிய கவுதம் கம்பீருடன் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வீரு பாய் (வீரேந்தர் சேவாக்) உட்பட அவர் எந்த மூத்த வீரர்களையும் மதிக்கவில்லை.
-
Smile when the world is all about attention! pic.twitter.com/GCvbl7dpnX
— Gautam Gambhir (@GautamGambhir) December 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Smile when the world is all about attention! pic.twitter.com/GCvbl7dpnX
— Gautam Gambhir (@GautamGambhir) December 7, 2023Smile when the world is all about attention! pic.twitter.com/GCvbl7dpnX
— Gautam Gambhir (@GautamGambhir) December 7, 2023
என்னை தகாத வார்த்தையில் பேசினார். அந்த நேரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை என சொல்ல விரும்புகிறேன். சக ஊழியர்களை மதிக்கவில்லை என்றால், மக்களை பிரநிதிபடுத்துவதில் என்ன பயன் இருக்கிறது.
என் மாநிலம், குடும்பம் என எல்லோரையும் புண்படுத்தும் அளவிற்கு பேசினார். நான் அவரை திட்டாத போதிலும், அவர் என்னை தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் பேசினார். தொலைக்காட்சியில் விராட் கோலியை பற்றிக் கேட்டால் கூட அவர் பேசுவதில்லை. வேறு எதையாவது பேசுவார். நான் விரிவாக கூற விரும்பவில்லை" என்றார்.
இதையும் படிங்க: கிரிக்கெட் உலகில் மற்றோரு சர்ச்சை… பந்து கையில் பட்டதால் அவுட் கொடுக்கப்பட்ட வங்கதேச வீரர்!