லண்டன்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயண் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. இத்தொடரில், மூன்று போட்டிகள் நிறைவுற்ற நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலைப்பெற்றது. நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கரோனா தொற்று இருப்பது நேற்று (செப். 6) கண்டறியப்பட்டது. மேலும், அவர் உள்பட பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோர் விடுதி அவர்களின் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த போட்டிக்கு செல்லமாட்டார்கள்
இதில், அருண், ஸ்ரீதர் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று (செப். 6) உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இதனால், ரவி சாஸ்திரி உள்பட நால்வரும் மான்செஸ்டர் நகரில் நடக்கும் இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணியோடு பயணிக்க மாட்டார்கள் என்றும் லண்டன் நகரத்திலேயே 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
-
💬 💬 Team performed well despite the absence of crucial members of the support staff: #TeamIndia Batting Coach Vikram Rathour #ENGvIND pic.twitter.com/IFlbppOlcp
— BCCI (@BCCI) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">💬 💬 Team performed well despite the absence of crucial members of the support staff: #TeamIndia Batting Coach Vikram Rathour #ENGvIND pic.twitter.com/IFlbppOlcp
— BCCI (@BCCI) September 6, 2021💬 💬 Team performed well despite the absence of crucial members of the support staff: #TeamIndia Batting Coach Vikram Rathour #ENGvIND pic.twitter.com/IFlbppOlcp
— BCCI (@BCCI) September 6, 2021
மேலும், ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதனால், பிசிசிஐ மான்செஸ்டர் நகரில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் புதிய பயோ-பபூள் நடைமுறையை அமல்படுத்த இருக்கிறது.
புத்தக வெளியீட்டு விழா காரணமா?
இந்திய வீரர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் (செப். 4) இரவு, நேற்று (செப். 5) காலை என இரண்டு முறை லேட்ரல் ஃப்ளோ பரிசோதனை (Lateral flow test) மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் சில தினங்களுக்கு முன்னதாக, ரவி சாஸ்திரியின் புத்தக வெளியீட்டு விழாவில் வெளி மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து தொற்று பரவிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவ்விழாவில் பரத் அருண், ஸ்ரீதர், நிதின் படேல் ஆகியோரும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளைமேக்ஸை நெருங்கும் ஓவல் டெஸ்ட்; முன்னிலை பெறுமா கோலி & கோ?