பேங்காக்: சுழல் ஜாம்பவானும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள பங்களாவில் ஒன்றில் நேற்று முன்தினம் (மார்ச் 5) உயிரிழந்தார்.
அவரது மறைவு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பட்ட மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றாலும், உடற்கூராய்வு அறிக்கைக்காக தாய்லாந்து காவல் துறையினர் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஷேன் வார்னேவின் உடற்கூராய்வு அறிக்கை இன்று (மார்ச் 7) வெளியாகியுள்ளது. அதில் , ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையாக ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அதிகாரிகள் அந்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை வழக்கறிஞர்களிடம் ஒப்படைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஷேன் வார்னே கடந்த இரண்டு வாரங்களுக்கு நீராகாரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்ததாகவும், இதுபோன்ற வேடிக்கையான உணவுமுறை இப்படி வினையாகிவிட்டதோ எனவும் அவரின் மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க: ஷேன் வார்னே தலையணையிலும், துண்டுகளிலும் ரத்தக்கறை... தாய்லாந்து போலீஸ்...