ETV Bharat / sports

உலகக் கோப்பையை வெல்வதற்கு ரோகித் கேப்டன்சி எப்படி? - ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் கருத்து

Rohit Sharma's childhood coach Dinesh Lad: உலகக் கோப்பையை வெல்வதற்கு ரோகித் சர்மாவின் முந்தைய ஆட்டங்களின் வெளிப்பாடு உதவும் என ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் லாட் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 4:30 PM IST

சென்னை: உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023, வருகிற 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

இது தொடர்பாக ரோகித் சர்மாவின் குழந்தைப்பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறுகையில், “சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை மற்றும் இதர சில ஆட்டங்களில் ரோகித் சர்மாவின் விளையாட்டுத் திறன், கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவியாக இருக்கும். ரோகித், கேட்ச் பிடிப்பதைப் பார்த்தே, அவரது உடல் திறன் எந்த அளவு வலிமையாக உள்ளது என்பதை அறிய முடியும். எனவே, அவரது உடல் திறன் பற்றி கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் சமநிலையில் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். காயம் அடைந்த பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரிட் பும்ராவின் பவுலிங், முன்பை விட மிகவும் வலிமையாக உள்ளது. பெரும்பாலான ஆல்-ரவுண்டர்ஸ் அணியில் உள்ளனர். நிச்சயமாக இந்தியா, உலகக் கோப்பை போட்டியில் சிறந்த மற்றும் வலிமைமிக்க போட்டியாளராக இருக்கிறது.

ஏனென்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற மற்ற அணிகளைப் பற்றி என்னால் கூற முடியாது. ஆனால், அவர்கள் நன்றாக விளையாடுவார்கள். ஆசியக் கோப்பையை நமது அணி வென்றதன் மூலம், அனைத்து மூன்று பிரிவுகளிலும் இந்தியா சிறப்பாக உள்ளது.

ரோகித் சர்மாவின் தலைமையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா கோப்பையை வெல்லும். ரோகித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பவுலராகத் தொடங்கினார், ஆனால், பின்னாளில் அவர் பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். ஷர்துல் தாக்கரும் தனது பேட்டிங்கில் வித்தைகளை நிகழ்த்துபவர். தனது பேட்டிங்கைத் தொடங்கும் ரோகித் ஷர்மா, மிடில் ஆர்டரில் அதிக நேரம் நிலைக்க வேண்டியது கட்டாயம்.

கடந்த 2019 உலகக் கோப்பையின்போது, ரோகித் பொறுமையாக இருந்ததால் தொடர்ச்சியாக 5 சதங்களை அவரால் அடிக்க முடிந்தது. ரோகித் சர்மாவின் அணியை பந்துவீச்சாளர்கள் வெளியேற்றுவது மிகவும் கடினம், அவர் தவறு செய்தால் மட்டுமே, அவரை வெளியேற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிரிக்கெட் அரசன் வீழ்ந்தது எப்படி? உலக கோப்பை முதல் தகுதிச் சுற்று வெளியேற்றம் வரை! செய்யத் தவறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.