திருவனந்தபுரம் (கேரளா): 13வது ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதன்படி, நாளை மறுநாள் (அக்.5) தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
-
Bad news for cricket fans.
— Johns. (@CricCrazyJohns) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It's raining heavily in Thiruvananthapuram. [RevSportz] pic.twitter.com/5z04sWn4Xv
">Bad news for cricket fans.
— Johns. (@CricCrazyJohns) October 3, 2023
It's raining heavily in Thiruvananthapuram. [RevSportz] pic.twitter.com/5z04sWn4XvBad news for cricket fans.
— Johns. (@CricCrazyJohns) October 3, 2023
It's raining heavily in Thiruvananthapuram. [RevSportz] pic.twitter.com/5z04sWn4Xv
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதற்கு முன்னதாக 2003, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி, நெதர்லாந்து அணியுடன் மோதியது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் மற்றொரு பேட்டியில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 9வது பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது பயிற்சி ஆட்டம் டாஸ் போடப்பட்ட நிலையில், மழையால் ரத்து செய்யப்பட்டது.
இதே போன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது பயிற்சி ஆட்டமானது டாஸ் போடப்படாமலே ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து இடையிலான 5வது பயிற்சி ஆட்டமும் மழையால் முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெறும் போட்டியின்போது கனமழை பெய்யும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஈரப்பதம் அளவு 94 சதவீதமாக இருப்பதால், இது மழை பெய்ய அதிக வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காற்று வீசாது என்றாலும், தற்போதைய வானிலை மேகமூட்டமாகவே காட்சியளிக்கிறது. இதையடுத்து, நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் 2வது பயிற்சி ஆட்டத்திலும் மழையின் போக்கு தொடரும் என்று தெரிகிறது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த ஆட்டமானது வருகிற அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: World Cup Cricket 2023: பெங்களூரு ஸ்டேடியத்தில இவ்வளவு சிறப்புகளா! நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!