பெங்களூரு : 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் 18வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடங்கினர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், காலூன்றிய பின்னர் தடம் பதிக்கத் தொடங்கினர். பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட இருவரும் துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால், இந்த ஜோடியை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியவில்லை. பவர் பிளே முடிந்த பிறகும் இந்த ஜோடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நையப் புடைத்தது.
-
David Warner's 21st ODI century leads the Australia charge in Bengaluru 🔥@mastercardindia Milestones 🏏#CWC23 | #PAKvAUS pic.twitter.com/Zn54v1Hqm2
— ICC (@ICC) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">David Warner's 21st ODI century leads the Australia charge in Bengaluru 🔥@mastercardindia Milestones 🏏#CWC23 | #PAKvAUS pic.twitter.com/Zn54v1Hqm2
— ICC (@ICC) October 20, 2023David Warner's 21st ODI century leads the Australia charge in Bengaluru 🔥@mastercardindia Milestones 🏏#CWC23 | #PAKvAUS pic.twitter.com/Zn54v1Hqm2
— ICC (@ICC) October 20, 2023
அபாரமாக விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினர். ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கோர் 259 ரன்களாக இருந்த போது ஷாகீன் அப்ரிடி பந்து வீச்சில் மார்ஸ் ஆட்டமிழந்தார்.
அபாரமாக விளையாடிய மிட்செல் மார்ஸ் 121 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சந்தித்த முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
-
Shaheen Afridi closes out the Australian innings in style, picking up the 2nd five wicket haul of #CWC23 🖐️ @mastercardindia Milestones 🏏 #CWC23 | #AUSvPAK pic.twitter.com/qjoOvAHRJB
— ICC (@ICC) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shaheen Afridi closes out the Australian innings in style, picking up the 2nd five wicket haul of #CWC23 🖐️ @mastercardindia Milestones 🏏 #CWC23 | #AUSvPAK pic.twitter.com/qjoOvAHRJB
— ICC (@ICC) October 20, 2023Shaheen Afridi closes out the Australian innings in style, picking up the 2nd five wicket haul of #CWC23 🖐️ @mastercardindia Milestones 🏏 #CWC23 | #AUSvPAK pic.twitter.com/qjoOvAHRJB
— ICC (@ICC) October 20, 2023
7 ரன்கள் இருந்த போது பாகிஸ்தான் வீரர் உஸ்மா மிர்ரின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒரு புறம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் தொடக்க வீரர் டேவிட் வார்னர் நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடி 150 ரன்களை கடந்தார். 163 ரன்களை எட்டிய போது ஹரீஸ் ரவுஃப் பந்தை டேவிட் வார்னர் தூக்கி அடிக்க, அது மாற்று வீரர் ஷதாப் கான் கையில் தஞ்சமடைந்தது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 367 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. பேட் கம்மின்ஸ் 6 ரன்னுடனும், ஆடம் ஜம்பா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் சார்பில் ஷாகீன் அப்ரிடி 5 விக்கெட்டுகளும், ஹரீஸ் ரவுப் 3 விக்கெட்களும், உஸ்மா மிர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-அக் நல்ல தொடக்கத்தையே தந்தனார். ஓவருக்கு 5, 6 ரன்கள் குறையாமல் எடுத்தது இந்த ஜோடி. இருவரும் அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 21 ஓவர்களில் 134 ரன்கள் குவித்திருந்த நிலையில், ஷபீக் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இமாம் 70, பாபர் அசாம் 18 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர்.
ரிஸ்வான் - சவுத் ஷகீல் ஜோடி அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆட்டத்தை விளையாடினாலும், அவர்களும் ஒரு கட்டத்தில் அவுட் ஆகினார். ரிஸ்வான் 46 ரன்களுடனும், சவுத் ஷகீல் ரன்களுடனும் வெளியேறினர். இதையடுத்து களம் வந்த வீரர்கள் யாரும் களத்தில் நிலைக்காமல், சீரான இடைவெளியில் விக்கெட்களை பரிகொடுத்தனர்.
இறுதியில், 45.3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 305 ரன்களுக்கு ஆ; அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 4 விக்கெட்களும், பேட் கம்மின்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க : Hardik Pandya: நியூசிலாந்து ஆட்டத்தில் ஹர்திக் விலகல்? ஷமியா? சூர்யகுமாரா? யாருக்கு வாய்ப்பு?