டுனெடின்: பாகிஸ்தான் மகளிர் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் தொடர் விளையாடி வருகிறது. இத்தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2 டி20 போட்டிகள் முடிவடைந்துள்ளன.
-
History-makers! Jubilation in the Pakistan camp 🎉#NZWvPAKW | #BackOurGirls pic.twitter.com/izjhIJ86DU
— Pakistan Cricket (@TheRealPCB) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">History-makers! Jubilation in the Pakistan camp 🎉#NZWvPAKW | #BackOurGirls pic.twitter.com/izjhIJ86DU
— Pakistan Cricket (@TheRealPCB) December 5, 2023History-makers! Jubilation in the Pakistan camp 🎉#NZWvPAKW | #BackOurGirls pic.twitter.com/izjhIJ86DU
— Pakistan Cricket (@TheRealPCB) December 5, 2023
இதில் கடந்த 3ஆம் தேதி டுனெடின், யுனிவர்சிட்டி ஒவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில், அதே மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் திரீல் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான முனீபா அலி 35 ரன்களும், அலியா ரியாஸ் 32 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து பந்து வீச்சு அதிகபட்சமாக சார்பில் ஃபிரான் ஜோனாஸ் மற்றும் மோலி பென்ஃபோல்டு தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
-
Pakistan women create history in New Zealand
— PCB Media (@TheRealPCBMedia) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details here ➡️ https://t.co/C7iekXktr4#NZWvPAKW | #BackOurGirls
">Pakistan women create history in New Zealand
— PCB Media (@TheRealPCBMedia) December 5, 2023
Details here ➡️ https://t.co/C7iekXktr4#NZWvPAKW | #BackOurGirlsPakistan women create history in New Zealand
— PCB Media (@TheRealPCBMedia) December 5, 2023
Details here ➡️ https://t.co/C7iekXktr4#NZWvPAKW | #BackOurGirls
இதனைத்தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து பேட்டிங்கில் அதிகபட்சமாக பந்து வீச்சாளர் ஹன்னா ரோவ் மட்டுமே 33 ரன்கள் சேர்த்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் திரீல் வெற்றி பெற்று 2-0 என்ற முன்னிலையில் இருப்பது மட்டுமல்லாமல் தொடரையும் கைப்பற்றியது. இது 2018ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் வென்ற முதல் டி20 தொடர் ஆகும். அதேபோல் நியூசிலாந்து அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: புரோ கபடி லீக்: ஆரம்பமே அதிரடி காட்டிய தமிழ் தலைவாஸ்.. குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி!