அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் இன்று (நவம்பர் 6) மோதின. முதலில் டாஸ் வெற்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 48 பந்துகளுக்கு 54 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் 20 பந்துகளுக்கு 24 ரன்களையும், சௌமியா சர்க்கார் 17 பந்துகளுக்கு 20 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும், இப்திகார் அகமது 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அந்த வகையில் 128 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர். ஆரம்பம் முதலே விக்கெட்டை பறிகொடுக்காமல் சீராக ரன்களை எடுத்தனர். அதன்காரணமாக 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து வெற்றிபெற்றனர். இந்த தொடரின் அரையிறுதிக்கு 4ஆவது அணியாக நுழைந்தனர். அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 32 பந்துகளுக்கு 32 ரன்களை எடுத்தார். முகமது ஹாரிஸ் 18 பந்துகளுக்கு 31 ரன்களையும், கேப்டன் பாபர் அசாம் 33 பந்துகளுக்கு 25 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க: TNCA தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு