மும்பை: ஆஸ்திரேலியா மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. இதில் 1 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முடிவடைந்துள்ள நிலையில், இத்தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
-
A scintillating century from Phoebe Litchfield has put Australia in command at the Wankhede 👊#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/mtxTNAKDqQ
— ICC (@ICC) January 2, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A scintillating century from Phoebe Litchfield has put Australia in command at the Wankhede 👊#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/mtxTNAKDqQ
— ICC (@ICC) January 2, 2024A scintillating century from Phoebe Litchfield has put Australia in command at the Wankhede 👊#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/mtxTNAKDqQ
— ICC (@ICC) January 2, 2024
இத்தொடரின் 3வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 338 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் விளாசி 119 ரன்கள் குவிக்க, அலிசா ஹீலி 82 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகளில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 30, சதர்லேண்ட் 23, அலனா கிங் 26 ரன்கள் எடுத்தனர்.
இந்தியச் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்களும், அமன்ஜோத் கவுர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
-
Australia complete a 3-0 whitewash with a dominating win over India in the third and final ODI 👊#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/ZdH4JNUFyK
— ICC (@ICC) January 2, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Australia complete a 3-0 whitewash with a dominating win over India in the third and final ODI 👊#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/ZdH4JNUFyK
— ICC (@ICC) January 2, 2024Australia complete a 3-0 whitewash with a dominating win over India in the third and final ODI 👊#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/ZdH4JNUFyK
— ICC (@ICC) January 2, 2024
இறுதியில் இந்திய அணி 32.4 ஓவர்கள் முடிவில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 29, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா தலா 25, ரிச்சா கோஷ் 19, பூஜா வஸ்த்ரகர் 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பந்து வீச்சு தரப்பில் ஜார்ஜியா வேர்ஹாம் 3, மேகன் ஷட், அலனா கிங் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆஷ்லே கார்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
மேலும், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரின் மூன்று போட்டிகளுமே நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2023-ஆம் ஆண்டின் கிரிக்கெட் நாயகர்கள்.. பேட் கம்மின்ஸ் முதல் விராட் கோலி வரை!