இந்தியாவில் 1983ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட மவுசு, அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட் என வரிசையாக உலகத்தர வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு அழைத்துவந்தது. இவர்கள் வந்த பிறகு ஒரு தலைமுறை கிரிக்கெட்டை நோக்கி வர தொடங்கியது.
-
A legend and an inspiration! 🙌 🙌
— BCCI (@BCCI) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's wishing former #TeamIndia captain @msdhoni a very happy birthday. 🎂 👏#HappyBirthdayDhoni pic.twitter.com/QFsEUB3BdV
">A legend and an inspiration! 🙌 🙌
— BCCI (@BCCI) July 6, 2021
Here's wishing former #TeamIndia captain @msdhoni a very happy birthday. 🎂 👏#HappyBirthdayDhoni pic.twitter.com/QFsEUB3BdVA legend and an inspiration! 🙌 🙌
— BCCI (@BCCI) July 6, 2021
Here's wishing former #TeamIndia captain @msdhoni a very happy birthday. 🎂 👏#HappyBirthdayDhoni pic.twitter.com/QFsEUB3BdV
அப்படி வந்தவர்களில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் என பலர் தங்களை உலகத்தர வீரர்களாக நிரூபித்தனர். இவர்களைப் போலவே கிரிக்கெட்டை நோக்கி ஒருவர் வந்தார். ஆனால், அவர் மேற்கூறியவர்களைவிட சற்று தனித்து நின்றார், தெரிந்தார்.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு இந்திய தீவுகளில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா நாக்-அவுட்டாகி வெளியேற, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 உலகக்கோப்பையை தட்டித்தூக்கியது இந்திய அணி. ஐந்து மாத இடைவெளியில் ஒரு தலைவன் உருவாகி நின்றான். ஆரம்பத்தில் தனது தலை முடியால் தனித்து தெரிந்த அவர், 2007 செப்டம்பர் 24க்கு பிறகு தனது தலைமை பண்பால் தனித்து தெரிந்தார், நின்றார். அவர் பெயர் தோனி.
-
Super Birthday to Namma #Thala @msdhoni 😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The one, the only one, now and forever who makes 💛 go 𝒯𝒽𝒶𝓁𝒶 𝒯𝒽𝒶𝓁𝒶! #THA7A #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/8U9BoJDLrZ
">Super Birthday to Namma #Thala @msdhoni 😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 6, 2021
The one, the only one, now and forever who makes 💛 go 𝒯𝒽𝒶𝓁𝒶 𝒯𝒽𝒶𝓁𝒶! #THA7A #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/8U9BoJDLrZSuper Birthday to Namma #Thala @msdhoni 😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 6, 2021
The one, the only one, now and forever who makes 💛 go 𝒯𝒽𝒶𝓁𝒶 𝒯𝒽𝒶𝓁𝒶! #THA7A #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/8U9BoJDLrZ
2007,11,13... தவிர்த்து
தோனி என்றாலே டி20 உலகக்கோப்பை (2007), 50 ஓவர் உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராஃபி (2013) என தோனி தொடர் வெற்றிகளை பெற்றார். ஆனால், அதே சாம்பியன்ஸ் டிராஃபி (2009), டி20 உலகக்கோப்பை (2014), ஒரு நாள் போட்டி உலகக்கோப்பை(2015) என தோல்விகளையும் சந்தித்து ரசிகர்களின் நம்பிக்கையை இழந்தார்.
அதேபோல், 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் பாதியில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது, சீனியர்கள் வீரர்களை வெளியேற்றி அணியின் ஒற்றை சீனியராக வலம் வந்தது என அவர் மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களுக்கு அவரிடம் ஒரே பதில்தான் இருந்தது.
தோனியின் ப்ராசஸ்
அந்த குற்றச்சாட்டு அனைத்துக்கும் அவர் ஒரே பதில்தான் வைத்திருந்தார். அது அணியின் எதிர்காலம். உலக கிரிக்கெட்டில் இப்போது இந்தியா அசைக்க முடியாத இடத்தில் இருக்க காரணம் தோனி அன்று இளம் வீரர்களுக்கு வழிவிட்டது. தற்போது கோலி கேப்டன்சியில் இந்தியா உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், அவருக்கு கைக்கொடுத்தது தோனியின் ப்ராசஸ்.
இரண்டாண்டு தடைக்கு பிறகு 2018இல் சிஎஸ்கே கோப்பைதான் தோனி கடைசியாக வென்ற கோப்பை. 2019 உலகக்கோப்பையில் தோல்வி, 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோல்வி என வழக்கமாக தோனிக்கும் தோல்விக்கும் உறவு தொடர்ந்துக்கொண்டேதான் வருகிறது.
தலைவன் ஒருவனே
தோனிக்கு முறையாக வழியனுப்பும் போட்டியில்லாதது பெரும் குறையாக இருந்துவரும் நிலையில், வரும் 2021 ஐபிஎல் தொடராவது தோனிக்கான தொடராக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
இனி இந்திய அணி அடுத்து பெறும் அத்தனை வெற்றிப் பக்கங்களிலும் தோனியின் அமைதி சிரிப்பு ஒளிந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏனெனில் தோல்வியில் முளைத்தெழுந்த வெற்றியின் தலைவன்....
இதையும் படிங்க: ரசிகர்கள் பார்த்திடாத தோனியின் புகைப்படங்கள்!