ETV Bharat / sports

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அப்ஸ்டாக்ஸ் அணி அறிவிப்பு!

author img

By

Published : Jul 11, 2023, 1:45 PM IST

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023 போட்டிக்கான அப்ஸ்டாக்ஸ் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

இலங்கை மற்றும் நெதர்லாந்தில் இருந்து தலா மூன்று வீரர்கள் ICC ஆடவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023 போட்டியின் அப்ஸ்டாக்ஸ் (Upstox) அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பந்துவீச்சு இரட்டையர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக்கோப்பையில் களமிறங்குகின்றனர். அதே சமயம் சக தகுதிகொண்ட அணிகளான நெதர்லாந்து அணிக்காக ஆல்-ரவுண்டர்கள் விக்ரம்ஜித் சிங் மற்றும் பாஸ் டி லீட் மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

சீன் வில்லியம்ஸ் (Player of the Tournament) உட்பட போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே அணிக்கும் மூன்று தேர்வுகள் உள்ளன. மீதமுள்ள இரண்டில் ஸ்காட்லாந்து பங்களிக்கிறது. இந்த விருதுக்கான நடுவர் குழுவில் நடாலி ஜெர்மானோஸ் மற்றும் பிரையன் முர்கட்ராய்ட் (commentary representatives), ஃபிர்டோஸ் மூண்டா (media representative), அலெக்ஸ் வார்ஃப் (match officials representative) மற்றும் ஹாமில்டன் மசகட்சா (Tournament Director) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023 போட்டிக்கான அணி:

1. பதும் நிஸ்ஸங்க (இலங்கை) 69.50 சராசரியில் 417 ரன்கள்

2. விக்ரம்ஜித் சிங் (நெதர்லாந்து) 40.75 சராசரியில் 326 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள்

3. பிராண்டன் மெக்முல்லென் (ஸ்காட்லாந்து) 52.00 சராசரியில் 364 ரன்கள் மற்றும் 17.52 சராசரியில் 13 விக்கெட்டுகள்

4. சீன் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே) 100.00 சராசரியில் 600 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள்

5. பாஸ் டி லீடே (நெதர்லாந்து) 47.50 சராசரியில் 285 ரன்கள் மற்றும் 22.13 சராசரியில் 15 விக்கெட்டுகள்

6. சிக்கந்தர் ரஸா (ஜிம்பாப்வே) 65.00 சராசரியில் 325 ரன்கள் மற்றும் 29.77 சராசரியில் 9 விக்கெட்டுகள்

7. ஸ்காட் எட்வர்ட்ஸ் (நெதர்லாந்து) 62.80 சராசரியில் 314 ரன்கள்

8. வனிந்து ஹசரங்க (இலங்கை) 12.90 சராசரியில் 22 விக்கெட்டுகள்

9. மகேஷ் தீக்ஷனா (இலங்கை) 12.23 சராசரியில் 21 விக்கெட்டுகள்

10. கிறிஸ் சோல் (ஸ்காட்லாந்து) 25.00 சராசரியில் 11 விக்கெட்டுகள்

11. ரிச்சர்ட் நகரவா (ஜிம்பாப்வே) 19.28 சராசரியில் 14 விக்கெட்டுகள்

பதும் நிஸங்க ஜிம்பாப்வேயில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம், 417 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் 102 பந்துகளில் 101 ரன்கள் குவித்து, லயன்ஸ் அணியைத் தோற்கடிக்க உதவினார். அத்துடன் ஸ்காட்லாந்தை வீழ்த்த 75 ரன்கள் முக்கியமானதாக இருந்தது.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணிக்காக பேட்டிங் மற்றும் பவூலிங் விளையாடிய விக்ரம்ஜித் சிங், தனது முதல் ODI சதத்தை எட்டியதால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமனுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் ரன்களைக் குவித்தார். மேலும், இறுதிப் போட்டியில் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் உட்பட ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிராண்டன் மெக்முல்லென், ஓமனுக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தது உட்பட அவர் எடுத்த இரண்டு சதங்களின் காரணமாக மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும், ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீன் வில்லியம்ஸ் (Player of the Tournament) நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராக 174 ரன்களும், ஓமனுக்கு எதிராக 142 ரன்களும் பெற்று தகுதிப் போட்டியின் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் 139.21 என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

டச்சு ஹீரோ பாஸ் டி லீடே ஸ்காட்லாந்திற்கு எதிரான அவரது பிரமிக்க வைக்கும் ஆட்டத்தால் அவர் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார். 123 மற்றும் 52 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்து நெதர்லாந்து அணியை முன்னுக்கு எடுத்துச்சென்றார். மேலும் போட்டி முழுவதும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் நெதர்லாந்து அணியின் 285 ரன்களுக்கு பாஸ் டி லீடேயின் பங்களிப்பு மிகவும் பெரிதாக இருந்தது.

சிக்கந்தர் ரஸா 52 பந்துகளில் சதம் அடித்து நெதர்லாந்திற்கு எதிராக ஜிம்பாப்வே அணியை வெற்றி பெற ஊக்குவித்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து, போட்டியின் இரண்டாவது ஆட்ட நாயகன் என்ற விருதை வென்றார்.

இலங்கையின் பந்துவீச்சு இரட்டையர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோரின் சிறப்பான ஆட்டம் அவர்களது அணியின் தகுதி மற்றும் ஒட்டுமொத்த டைட்டிலிற்கு உதவியது. மேலும் வனிந்து ஹசரங்கா UAE, ஓமன் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக ODIகளில் தொடர்ந்து மூன்று five-wicket எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பட்டத்தை பெற்றார் மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்றார், அத்துடன் நெதர்லாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளையும் பெற்றார்.

ஸ்காட்லாந்தின் கிறிஸ் சோல் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றியில் அவரது பங்களிப்பை சிறப்பான செயல்திறன் மூலம் வெளிப்படுத்தினார். இதன் மூலமாக பந்துவீச்சில் கடைசியாக சேர்க்கப்பட்டார்.

இறுதித் தேர்வில் ஜிம்பாப்வேயின் ரிச்சர்ட் நகரவா, போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக 4 விக்கெட்டுகள் உட்பட 19.28 சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: பணக்கார கிரிக்கெட் வீரர் யார்? டோனியா.. கோலியா.. இல்ல சச்சினா..? யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.