ETV Bharat / sports

IND VS ENG: 2-வது அரைஇறுதி - இந்திய அணி நிதான ஆட்டம் - 20 ஓவர் கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்து
author img

By

Published : Nov 10, 2022, 1:49 PM IST

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

சிட்னியில் நடந்த முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணியை தேர்வு செய்யும் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதேநேரம் அடிலெய்டு மைதானத்தில் இதுவரை நடந்த 11 டி20 போட்டிகளில் டாஸ் வென்ற அணி வெற்றிக் கனியை பறித்தது கிடையாது என்பதால் இந்திய அணியின் வெற்றிக்கு அனுகூலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அடிலெய்டு மைதானத்தில் திரண்ட இந்திய ரசிகர்கள் மேளம் அடித்தும் இசைக் கருவிகளை வாசித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடையை எதிர்த்து வழக்கு: நீதிமன்றம் உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.