டெல்லி: இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். பயிற்சி செய்யும் ஏற்பட்ட முதுகு வலி காரணமாக மருத்துவரை நாடியுள்ளார். அப்போது முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், 2 மாதங்கள் ஓய்வெடுக்கும் வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் இந்த டி20 தொடரில் பும்ரா பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ “இந்த உலக டி20 தொடரில் பும்ரா பங்கேற்கமாட்டார். அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, 6 மாத காலத்திற்கு ஓய்வெடுக்க உள்ளார்” என ட்வீட் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 டி20 போட்டியில் விளையாடிய பும்ரா திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்க செல்லவில்லை. ஏற்கனவே இந்தியாவின் ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா மூட்டுவலியால் டி20 தொடரில் பங்கேற்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் பிசிசிஐ துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா வின் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி