ஓல்டு ஃடிராபோர்டு : டெஸ்ட் மற்றும் ஒருநாள் என சர்வதேச அரங்கில் 1000 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் (708) சாதனையை ஏற்கனவே முறியடித்த நிலையில் தற்போது அனில் கும்ளேவின் (619) சாதனையை நெருங்குகிறார். இவர் கும்ளேவின் சாதனையை முறியடிக்க இன்னும் 3 விக்கெட்டுகள் தேவை.
இந்தப் பட்டியலில் இலங்கை அணியில் ஆடும் தமிழரான முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
2003ஆம் லார்ட்ஸில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுகமானார். தற்போதுவரை 167 போட்டிகள் விளையாடியுள்ள ஆண்டர்சன் 617 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்காம்மில் தொடங்குகின்றன.
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஆண்டர்சன்; இவர் தான் ஃபர்ஸ்ட்!