ETV Bharat / sports

GT VS DC: தோல்வியில் இருந்து பாடம் கற்குமா டெல்லி? 2வது வெற்றியை வசப்படுத்த குஜராத் அணி தீவிரம்! - ipl match update

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வியடைந்த நிலையில், 2வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்பில் களம் காண்கிறது குஜராத் அணி. சொந்த மண்ணில் விளையாடும் டெல்லி அணி வெற்றி பெறுமா? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

IPL CRICKET
ஐபிஎல் கிரிக்கெட்
author img

By

Published : Apr 4, 2023, 6:49 AM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 4) நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 31ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட குஜராத் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே அந்த உற்சாகத்தில், 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அந்த அணி இன்று களம் இறங்குகிறது.

வலுவான குஜராத்: பேட்டிங்கை பொறுத்தவரை விருத்திமான் சாஹா, சுப்மன் கில், ராகுல் திவாட்டியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்கள் கணிசமான ரன்களை குவித்தால், டெல்லி அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கலாம். பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி எதிரணியை மிரட்டி வருகிறார். சென்னை அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய அவர் 29 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்து அசத்தினார். இதேபோல் அல்சாரி ஜோசப், ரஷீத் கான் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள்.

3வது இடத்தில் களம் இறங்குவது யார்?: காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தொடரில் இருந்து விலகியுள்ளது குஜராத் அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. வழக்கமாக அவர் 3வது பேட்ஸ்மேனாக களம் இறங்கும் நிலையில், அந்த இடத்தில் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து குஜராத் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கூறுகையில், "அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. எந்த சவாலாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார். எனவே, குஜராத் அணியின் 3வது வீரர் யார் என்பது டாஸ் போடப்பட்ட பிறகே தெரியவரும்.

டெல்லி அணி எப்படி?: கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் தொடரில் இடம்பெறாதது டெல்லி அணிக்கு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 1ம் தேதி லக்னோ அணியை எதிர்கொண்ட டெல்லி அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் வார்னர் ஓரளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கடந்த ஆட்டத்தில் பிரித்வி ஷா சோபிக்கவில்லை. அதேபோல் நடுவரிசையில் இடம்பெற்றுள்ள மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், சர்ஃப்ராஸ் கான், பாவெல் ஆகியோரும் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். நடுவரிசை வீரர்கள் நிலைமையை உணர்ந்து விளையாடினால் தான், குஜராத் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

பந்து வீச்சாளர்களும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் களம் இறக்கப்பட்ட அதே பந்து வீச்சாளர்களுடன் அந்த அணி இன்று களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆன்ரிச் நாட்ர்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோர், இன்றைய போட்டிக்கு பிறகே அணியில் இணைவார்கள் என கூறப்படுகிறது.

சாதனையை நெருங்கும் வார்னர்: டெல்லி அணியின் கேப்டன் வார்னர் ஐபிஎல் தொடரில் 5,937 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 63 ரன்கள் எடுத்தால் அவர் 6,000 ரன்களை எட்டுவார். இதேபோல் 1963 ரன்கள் எடுத்துள்ள சுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் 37 ரன்கள் எடுத்தால் 2,000 ரன்களை அடைவார். ஐபிஎல் போட்டிகளில் 2,000 ரன்களை பூர்த்தி செய்ய ஹர்திக் பாண்ட்யாவுக்கு (1,971) இன்னும் 29 ரன்கள் தேவை.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி மற்றும் குஜராத் அணிகள் ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், டெல்லி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

போட்டி எங்கே?: குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

குஜராத் உத்தேச அணி விவரம்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோசுவா லிட்டில், யஷ் தயாள், அல்சாரி ஜோசப்.

டெல்லி உத்தேச அணி விவரம்: டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), ரோசோவ், ரோவ்மென் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேட்டன் சக்காரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.