ETV Bharat / sports

LSG Vs MI: எலிமினேட்டர் சுற்றில் மல்லுக்கட்டும் மும்பை - லக்னோ! வெளியேறப்போவது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் வாழ்வா, சாவா நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறும் அணி எது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

LSG Vs MI
LSG Vs MI
author img

By

Published : May 24, 2023, 9:01 AM IST

சென்னை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 24) நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி, தொடரை விட்டு வெளியேறும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்துகட்டும்.

நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 6 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 16 புள்ளிகளை (நிகர ரன் ரேட் -0.044) பெற்றுள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மிரட்டும் மிடில் ஆர்டர்: பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இஷான் கிஷன் ஒருசில ஆட்டங்களில் விரைவில் விக்கெட்டை இழப்பது மும்பை அணிக்கு மைனஸ். எனினும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கேமரூன் க்ரீன் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.

பந்துவீச்சில் மத்வால், பெஹ்ரென்டார்ஃப் தங்கள் பணிகளை சிறப்பாக செய்கின்றனர். கிறிஸ் ஜோர்டன் சிறிது ஏமாற்றம் அளிக்கிறார். சுழற்பந்து வீச்சில் அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா கைகொடுக்கிறார். குமார் கார்த்திகேயாவின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஒட்டுமொத்த அணியும் முழு பங்களிப்பை அளித்தால் தான் லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

லக்னோ எப்படி?: நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடிள்ள லக்னோ அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 17 புள்ளிகளை (நிகர ரன் ரேட் 0.284) பெற்று 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு லக்னோ அணி முன்னேறியது. குயின்டான் டி காக், ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டக் கூடியவர்கள். இவர்கள் 3 பேரையும் கட்டுப்படுத்த வேண்டியது மும்பை பந்துவீச்சாளர்களுக்கு முக்கிய சவாலாக இருக்கும். மன்கட், ஆயுஷ் படோனி நிலைத்து நின்று ஆடுவது அவசியம்.

பந்துவீச்சில் யஷ் தாகூர், ரவி பீஷ்னோய் (16 விக்கெட்கள்), க்ருணல் பாண்ட்யா மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் நவீன்-உல்-ஹக்கின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. எனவே பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி உள்ளது. எனினும் அடுத்த சுற்றுக்கு முன்னேற, மும்பை அணிக்கு லக்னோ நிச்சயம் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்டம் எங்கே?: லக்னோ - மும்பை அணிகள் மோதும் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, டிம் டேவிட், குமார் கார்த்திகேயா, கிறிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப், மத்வால்.

லக்னோ உத்தேச அணி: குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்ட்யா (கேப்டன்), மன்கட், ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யஷ் தாகூர், பீஷ்னோய், மொசின் கான், ஆவேஷ் கான்.

இதையும் படி: CSK vs GT: சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. இறுதிப் போட்டியில் கெத்தாக நுழைந்த சிஎஸ்கே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.