ETV Bharat / sports

'ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ஆடம் ஸாம்பா விளையாடமாட்டார்' -  ஆர்சிபி அறிவிப்பு - ஐபிஎல்

ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா ஐபிஎல் தொடக்க போட்டியில் விளையாடமாட்டார் என்று பெங்களூர் அணியின் இயக்குநர் மைக் ஹெஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

RCB's Adam Zampa to miss first match of IPL 2021

author img

By

Published : Mar 24, 2021, 11:29 PM IST

பெங்களூரு: ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா ஐபிஎல் தொடக்க போட்டியில் விளையாடமாட்டார் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இயக்குநர் மைக் ஹெஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணி விளையாட உள்ளது. இந்நிலையில் பெங்களூர் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மைக் ஹெஸன் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

"முதல் ஆட்டத்திற்கு வெளிநாட்டு வீரர்களின் முழுமையான குழு எங்களிடம் தயாராக இருக்கிறது. ஆடம் ஸாம்பா திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இது அவருக்கு ஒரு முக்கியமான நேரம். எனவே அவர் எங்களுடன் சேரும்போது, ​​அவர் மீண்டும் புத்துணர்ச்சியோடு இருப்பார். மீதமுள்ள போட்டிகளில் அணிக்கு பெரும் பங்களிப்பைச் செய்வார் என நம்பிக்கை உள்ளது" என்று ஹெஸன் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிக்கு பெங்களூர் அணி தனது பயிற்சி முகாமை மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. மார்ச் 28ஆம் தேதி ஏபி டிவில்லியர்ஸ் அணியில் இணைவார் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: டி20 தரவரிசையில் 4ஆவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.