ETV Bharat / sports

ஆப்கான் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா? - HUNDRED CRICKET SERIES

ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என்றும்; ஆனால் இதுவரை அவர்களிடம் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது.

ரஷித் கான், முகமது நபி
Rashid Khan and Nabi available for UAE leg of IPL
author img

By

Published : Aug 16, 2021, 5:31 PM IST

டெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடித்துவிட்டனர். தற்போது அதிபர் மாளிகை தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனிடையே, அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வேதச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புறப்படும் விமானங்கள் மக்கள் திரளால் ஸ்தம்பித்து உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா என்றும், அவர்களின் தற்போதைய நிலைமை என்ன என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இங்கிலாந்தில் இருக்கும் வீரர்கள்

தற்போது ரஷித் கான் இங்கிலாந்தில் நடைபெறும் ஹண்ட்ரெட் (Hundred) தொடரில் டிரன்ட் ராக்கெட்ஸ் அணிக்காகவும், முகமது நபி லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் பங்கேற்பார்களா அல்லது தங்களது குடும்பத்தினரைக் காண ஆப்கானிஸ்தான் செல்கிறார்களா என்பது தெரியவில்லை.

ரஷித் கான், முகமது நபி குறித்து, அவர்கள் விளையாடும் ஹைதராபாத் அணி நிர்வாகத்திடம் ஊடகங்கள் கேட்டபோது, "இதுவரை அவர்களிடம் இதுகுறித்து பேசவில்லை. ஆனால், அவர்கள் வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பார்கள்" என அந்த அணியின் தலைமை செயல் அலுவலரான சண்முகம் தெரிவித்தார்.

ரஷித் கான் வருத்தம்

ரஷித் கான், முகமது நபி, RASHID KHAN, NABI
ரஷித் கான் ட்வீட்

இதையடுத்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ரஷித் கானிடம் அவரது குடும்பத்தினர் குறித்தும், ஆப்கானிஸ்தானின் நிலவரம் குறித்தும் விசாரித்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர்சன் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில், "ஆப்கானிஸ்தானின் நிலவரம் குறித்து ரஷித் கானிடம் நீண்ட நேரம் உரையாடினேன். அங்கு அவருக்கு குடும்பத்தாருக்குப் பல இன்னல்கள் இருந்துள்ளது. அவரால், அவரது குடும்பத்தினரை அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை என மிகவும் வருந்தினார்.

இந்த கடினமான சூழலை கடப்பதற்கு, அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடி ஆகவேண்டும். அப்போதுதான் இந்த அழுத்தத்திலிருந்து மீள முடியும். இந்த ஹண்ட்ரெட் தொடரிலேயே, இதயத்தை கனமாக்கும் ஒரு கதை என்றால் அது இதுதான்" என்று கூறினார்.

யுஏஇ-யில் ஐபிஎல்

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த 13ஆவது ஐபிஎல் தொடர் கரோனா பரவல் காரணாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதிவரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மொத்தம் மீதமுள்ள 31 போட்டிகளில், துபாயில் 13 போட்டிகளும், சார்ஜாவில் 10 போட்டிகளும், அபுதாபியில் 8 போட்டிகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TNPL 2021: சென்னை அணி சாம்பியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.