ETV Bharat / sports

PBKS vs DC: டெல்லியுடன் மோதும் பஞ்சாப் - பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா? - PBKS

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளதா? இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

Delhi vs Punjab
டெல்லி பஞ்சாப்
author img

By

Published : May 17, 2023, 7:06 AM IST

தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அணியின் தற்போதைய ரன் ரேட் -0.268 ஆகும்.

பிளே ஆஃப்-க்கு முன்னேற முடியுமா?: பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்திலும், அடுத்து வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஆனால் அதுமட்டும் போதாது. பிற அணிகளின் முடிவுக்காகவும் காத்திருக்க வேண்டும். மேலும் பஞ்சாப் அணியின் ரன் ரேட் மைனஸில் உள்ளதால், இனி வரும் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம்.

கடைசியாக கடந்த 13ம் தேதி டெல்லியுடன் மோதிய பஞ்சாப் அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். எனினும் அவரை தவிர பிற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. கேப்டன் தவான், லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா ரன் குவிப்பது அவசியம். பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார், நேதன் எல்லீஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஃபார்மில் உள்ளனர். 12 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப், 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

வார்னர் ஆறுதல்: புள்ளிப்பட்டியலில் 10 இடத்தில் உள்ள டெல்லி அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வியைச் சந்தித்துள்ளது. கேப்டன் டேவிட் வார்னர் 12 ஆட்டங்களில் 384 ரன்களை குவித்துள்ளார். பில் சால்ட் ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறார். பிற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடத் தவறுகின்றனர். பவுலிங்கில் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் வலுசேர்க்கின்றனர். டெல்லி அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் இனி வரும் ஆட்டங்களில் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி போராடும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்டம் எங்கே?: டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டம் தர்மசாலா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

பஞ்சாப் உத்தேச அணி: பிரப்சிம்ரன் சிங், தவான் (கேப்டன்), லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஹர்ப்ரீத் பிரார், ஷாருக்கான், சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லீஸ்.

டெல்லி உத்தேச அணி: வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மார்ஷ், ரோசோவ், அக்சர் படேல், மணீஷ் பாண்டே, அமன் ஹகீம் கான், பிரவீன் டூபே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.