மும்பை: ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டம் டிஒய் பாட்டீல் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொங்குகிறது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. நேற்றுவரை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்தத குஜராத் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளியது.
இன்றையபோட்டியில் வென்றால் குஜராத் அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்கும். மறுப்புறம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய போராடி வெல்ல காத்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், டிம் சவுத்தி, சிவம் மவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி.
இதையும் படிங்க: என்ன நடந்தது கடைசி ஓவரில்? அன்று தோனி - இன்று பந்த்!