ETV Bharat / sports

RCB vs RR: சொந்த மண்ணில் 'கெத்து' காட்டிய பெங்களூரு: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Banglore won
பெங்களூரு வெற்றி
author img

By

Published : Apr 23, 2023, 8:06 PM IST

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

சபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார். எனினும் அதிரடியாக விளையாடிய டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஆகியோர் அரைசதம் விளாசினர். 39 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த டு பிளெஸ்ஸி ரன் அவுட்டானார். 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 16, பிரபு தேசாய் 0, ஹசரங்கா 6, வில்லே 4, வைசாக் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் போல்ட், சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்களையும், அஸ்வின், சாஹல் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

190 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த ராஜஸ்தான் அணியில் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன், தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்த நிலையில் இருவரும் சிறப்பாக விளையாடினர். 47 ரன்கள் எடுத்திருந்த போது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். படிக்கல் 52 ரன்களில் வெளியேறினார். கேப்டன் சாம்சன் 22, ஹெட்மேயர் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினர். நெருக்கடியான சூழலில், அஸ்வின் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. துருவ் ஜூரேல் 16 பந்துகளில் 34 ரன்கள் மற்றும் பசித் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்ளை வீழ்த்தினார். சிராஜ், வில்லே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் 8 புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.