சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினர். கெய்க்வாட் 37, ஷிவம் துபே 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் கான்வே, அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் விளாசி அசத்தினார். மொயின் அலி 10, ரவீந்திர ஜடேஜா 12 ரன்களிலும் வெளியேறினர்.
கடைசி ஓவரை சாம் கரன் வீசிய நிலையில், கடைசி இரண்டு பந்துகளை கேப்டன் தோனி சிக்ஸருக்கு விரட்டினார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்தது. கான்வே 92, தோனி 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பந்துவீச்சை பொறுத்தவரை பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சென்னை அணி: ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, மொயீன் அலி, ராயுடு, துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), பதிரானா, தேஷ்பாண்டே, தீக்சனா
பஞ்சாப் அணி: தவான் (கேப்டன்), தைடே, லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராசா, சாம் கரன், ஜெ.எம்.ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, சாஹர், அர்ஷ்தீப் சிங்.