ETV Bharat / sports

IPL 2023: குஜராத் அணியை துவம்சம் செய்து முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்! - அஸ்வின் ரவிச்சந்திரன்

16வது ஐபிஎல் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 17, 2023, 6:48 AM IST

அகமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா, சுப்மன் கில் ஜோடி முதலில் களமிறங்கினர். சாஹா வெறும் 4 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த கில் – சாய் சுதர்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

சுப்பன் கில் 45 ரன்களில் அரை சத வாய்ப்பை இழந்து அவுட் ஆனார். பின்னர் சாய் சுதர்சன் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் சேர்க்க அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லரும் சுப்பன் கில் வரிசையில் அரை சத வாய்ப்பை இழந்து 46 ரன்கள் எடுத்தார். பின்னர் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி வீரர்கள் விளையாடத் தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ராஜஸ்தான் அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தனர்.

4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, தேவ்தத் படிக்கல் – கேப்டன் சாம்சன் ஜோடி ரன் வேட்டையில் ஈடுபட்டது. படிக்கல் 26 ரன்னில் வெளியேற, சாம்சன் வழக்கமான அதிரடியால் குஜராத் பந்துவீச்சை சிதறடித்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி நேரத்தில் குஜராத் பவுலிங்கை விளாசிய ஷிம்ரோன் ஹெட்மையர் 26 பந்தில் 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

த்ருவ் ஜுரெல் 18 ரன்னும், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ரன்களும் சேர்த்தனர். பின்னர் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மொத்தம் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: GT vs RR: கடந்த சீசனில் 'மாஸ்' காட்டிய அணிகள் - இன்று மீண்டும் நேருக்கு நேர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.