ETV Bharat / sports

CSK vs DC: இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - ஐபிஎல் 2022 புள்ளிப்பட்டியல்

ஐபிஎல் தொடரின் 55 லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ipl-2022-match-55-chennai-super-kings-vs-delhi-capitals-in-maharashtra

author img

By

Published : May 8, 2022, 2:30 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டம் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்றிரவு (மே 8) 7:30 மணிக்கு நடக்கிறது. இதில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 6 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.

மறுப்புறம் டெல்லி அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் நுழைவதற்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இந்த வாய்ப்பும், முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அதுள்ள 3 போட்டிகளி இரண்டில் தோன்றால் மட்டுமே கிடைக்கும். டெல்லி அணி இன்னும் 3 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், மன்தீப் சிங், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரிபால் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது.

இதையும் படிங்க: LSG vs KKR: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கிய லக்னோ அணி - கேகேஆர் படுதோல்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.