ETV Bharat / sports

SRH vs DC: வார்னர் எடுத்த ரிவஞ் - ஹைதராபாத்தை ஹைஜாக் செய்தது டெல்லி! - IPL Match Update

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 92 ரன்கள் குவித்து மிரட்டிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

David Warner 92
David Warner 92
author img

By

Published : May 6, 2022, 7:38 AM IST

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 5) நடைபெற்ற முக்கிய லீக் ஆட்டத்தில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி அணி டாஸை இழந்து முதலில் பேட்டிங் ஆடியது.

டேஞ்சர்ஸ் டேவிட் - பவரான பாவெல்: டெல்லி அணியின் ஓப்பனர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 58 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 92 ரன்களை சேர்த்தார். மேலும், ரோவ்மான் பாவெலின் இறுதிநேர அதிரடியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. இதில், பாவெல் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 35 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர், சீன் அபாட், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

ஹைதராபாத் ஹாட்ரிக்... : தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரில் மார்க்ரம் 42, பூரன் 62 மட்டும் சற்று ஆறுதல் தர, அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, ஹைதராபாத் தனது 'ஹாட்ரிக்' தோல்வியை சந்தித்தது. கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்ட்டார்,

புள்ளிகள் பட்டியலில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 5 தோல்வி) 5ஆவது இடத்திலும், ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 5 தோல்வி) 6ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.