ETV Bharat / sports

SRH vs RCB: 'கோலி மீண்டும் டக்' - ஆர்சிபியை 68 ரன்களில் அடக்கி ஆண்ட எஸ்ஆர்ஹெச்! - IPL 2022 Match 36 SRH vs RCB Highlights

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு அணி 68 ரன்களில் ஆல்-அவுட்டானது. தொடர்ந்து வெறும் 8 ஓவர்களில் இலக்கை எட்டி, புள்ளிப்பட்டிய ஹைதராபாத் அணி 2ஆவது இடத்திற்கு முன்னேறியது.

SRH vs RCB
SRH vs RCB
author img

By

Published : Apr 24, 2022, 8:13 AM IST

Updated : Apr 24, 2022, 8:20 AM IST

மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 24) இரவு நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில், ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி வழக்கம் போல் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மிரட்டிய யான்சன் - நடராஜன்: இதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணி இரண்டாம் ஓவரில் இருந்தே சரிவை சந்தித்தது. டூ பிளேசிஸ் 5, அனுஜ் ராவத் 0, கோலி 0 ரன்களில் வெளியேறினர். இம்மூன்று விக்கெட்டுகளையும் மார்கோ யான்சன் வீழ்த்தினார். தொடர்ந்து, நடராஜன் மேக்ஸ்வெல்லை 12 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

தொடர்ந்து, மிடில் ஆர்டரில் பிரபுதேசாய் 15, தினேஷ் கார்த்திக் 0, ஷாபாஸ் அகமது 7 ரன்களில் வெளியேறினர். டெயிலெண்டர்களும் விரைவாக ஆட்டமிழக்க, 16.1 ஓவர்களில் வெறும் 68 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. ஹைதராபாத் பந்துவீச்சில் யான்சன், நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சுசித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆர்சிபியும் ஏப்ரல் 23-ஆம் தேதியும்...: இந்த 68 ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது குறைவான ஸ்கோராகும். பெங்களூரு அணி 8ஆவது முறையாக 100 ரன்களுக்கு கீழ் ஆல்-அவுட்டாகியுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரையும் (263), குறைந்தபட்ச ஸ்கோரையும் (49) பெங்களூரு அணியே எடுத்துள்ளது.

இதில், சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஆர்சிபி 2013இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263 ரன்களை எடுத்தும், 2017இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ரன்களை எடுத்ததும் ஏப். 23ஆம் தேதி அன்றுதான். அதேபோன்று, நேற்றைய தினமும் (ஏப். 23) ஆர்சிபி குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் காட்டிய அதிரடி: 69 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் ஓப்பனர்கள், மிரட்டலான தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக, அபிஷேக் சர்மா பவர்பிளேவில் பவுண்டரிகளை பறக்கவிட விறுவிறு என்று ஸ்கோர் ஏறியது. 8ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் அபிஷேக் 47 (28) ரன்களில் வெளியேறினார். இருப்பினும், அதே ஓவரின் கடைசி பந்தில், ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார்.

இதன்மூலம், 12 ஓவர்களை மிச்சம் வைத்த ஹைதராபாத் அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. மேலும், பெங்களூருவின் டாப்-ஆர்டர் பேட்டர்களை சாய்த்த மார்கோ யான்சன் ஆட்டநாயகனாக தேர்வானார். தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்றுள்ள ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், தோல்வியடைந்த பெங்களூரு அதே 10 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: GT vs RR: கொல்கத்தாவை சாய்த்த குஜராத்!

Last Updated : Apr 24, 2022, 8:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.