மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 23) மாலை நடைபெற்ற 35ஆவது லீக் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது.
ஹர்திக் அதிரடி: இதனைத் தொடர்ந்து, குஜராத் அணி 157 ரன்களை குஜராத் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. குஜராத் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 67 (49) ரன்களை பதிவுசெய்தார். கொல்கத்தா சார்பில் ரஸ்ஸல் 4 விக்கெட்டுகளையும், சௌதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சொதப்பிய டாப் ஆர்டர்: 157 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கினாலும், கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தது. முதல் கட்ட பேட்டர்களான சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன், நிதீஷ் ராணா, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் வரிசையாக நடையைக் கட்டினர். மிடில் ஆர்டரில் ரின்கு சிங் 35 (28) ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 17 (17) ரன்களையும் எடுத்து ஆறுதல் அளித்தனர்.
-
🚨 Milestone Alert 🚨
— IndianPremierLeague (@IPL) April 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to @rashidkhan_19 who completes 1️⃣0️⃣0️⃣ wickets in the #TATAIPL as he scalps Venkatesh Iyer's wicket 👏👏#KKRvGT pic.twitter.com/kQe1qNftn9
">🚨 Milestone Alert 🚨
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
Congratulations to @rashidkhan_19 who completes 1️⃣0️⃣0️⃣ wickets in the #TATAIPL as he scalps Venkatesh Iyer's wicket 👏👏#KKRvGT pic.twitter.com/kQe1qNftn9🚨 Milestone Alert 🚨
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
Congratulations to @rashidkhan_19 who completes 1️⃣0️⃣0️⃣ wickets in the #TATAIPL as he scalps Venkatesh Iyer's wicket 👏👏#KKRvGT pic.twitter.com/kQe1qNftn9
கடைசி ஓவர்...: மேலும், அணியின் நட்சத்திர வீரர் ரஸ்ஸல் சிக்சர்களாக பறக்கவிட்டு மிரட்டிக்கொண்டிருந்தார். அவருடன் உமேஷ் யாதவும் சற்று விரைவாக ரன்களை குவித்தார். இதனால், கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. அல்ஸாரி ஜோசப் வீசிய அந்த ஓவரில் முதல் சிக்ஸர் அடித்த ரஸ்ஸல், அடுத்த பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற கொல்கத்தாவின் வெற்றிக் கனவு சுக்குநூறாக உடைந்தது.
-
Will we witness a @Russell12A special❓
— IndianPremierLeague (@IPL) April 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
KKR need 50 from 5 overs.
Follow the match ▶️ https://t.co/GO9KvGCXfW#TATAIPL | #KKRvGT pic.twitter.com/H66GzVuH4G
">Will we witness a @Russell12A special❓
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
KKR need 50 from 5 overs.
Follow the match ▶️ https://t.co/GO9KvGCXfW#TATAIPL | #KKRvGT pic.twitter.com/H66GzVuH4GWill we witness a @Russell12A special❓
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
KKR need 50 from 5 overs.
Follow the match ▶️ https://t.co/GO9KvGCXfW#TATAIPL | #KKRvGT pic.twitter.com/H66GzVuH4G
மீண்டும் முதலிடம்: கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்து. இதன்மூலம், குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 1 தோல்வி) முதலிடத்திலும், கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 5 தோல்வி) 7ஆவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: No Ball Controversy: என்ன நடந்தது கடைசி ஓவரில்? அன்று தோனி - இன்று பந்த்!