ETV Bharat / sports

RCB vs MI: ஆர்சிபியிடம் அடிபணிந்தது மும்பை; தொடர் தோல்விகளால் திணறல்!

ஐபிஎல் தொடரின் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. 47 பந்துகளில் 66 ரன்களை குவித்த அனுஜ் ராவத் ஆட்டநாயகனாக தேர்வானார்.

RCB vs MI
RCB vs MI
author img

By

Published : Apr 10, 2022, 7:52 AM IST

புனே: 15ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 9) இரவு நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சிக்சர் மழைப்பொழிந்த சூர்யகுமார்: இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்கமும், பினிஷிங் ஓரளவுக்கும் அமைந்தாலும், மிடில்-ஆர்டர் மிகவும் சொதப்பலாக அமைந்தது. எனவே, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுர்யகுமார் யாதவ், 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உள்பட 68 ரன்களை குவித்து அசத்தினார். பெங்களூரு பந்துவீச்சில் ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சுமாரான தொடக்கம்: 152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சுமாரகவே அமைந்தது. டூ பிளேசிஸ் - அனுஜ் ராவத் ஜோடி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை மட்டுமே எடுத்தது. மிகப்பொறுமையாக விளையாடி வந்த டூ பிளேசிலஸ் 16 (24) ரன்களில் உனத்கட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

டெல்லி வாலாக்களின் அதிரடி: இதன்பின்னர், ஜோடி சேர்ந்த ராவத் - கோலி ஆகியோர் நிலையாக நின்று சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். குறிப்பாக, அனுஜ் ராவத் பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருவரும் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அனுஜ் ராவத் ரன்-அவுட்டாகி ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில், 2 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேக்ஸி ரிட்டன்ஸ்: பின்னர், 19ஆவது ஓவரை பேபி ஏபிடி என்றழைக்கப்படும் டிவால்ட் பிரீவிஸ் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் கோலி 48 (36) ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் மேக்ஸ்வேல் களமிறங்கினார். அந்த ஓவரின் 2ஆவது, 3ஆவது பந்தில் மேக்ஸ்வேல் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து பெங்களூரு அணியின் மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தார்.

புள்ளிப்பட்டியல் விவரம்: இதன்மூலம், பெங்களூரு அணி 9 பந்துகளை மீதம் வைத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. அனுஜ் ராவத் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். புள்ளிப்பட்டியலில், பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 1 தோல்வி) 3ஆவது இடத்திலும், மும்பை அணி புள்ளியெதும் இன்றி (4 தோல்வி) 9ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டிகள்: ஐபிஎல் தொடரில் இன்றும் (ஏப். 10) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மும்பை பிரப்போர்ன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதும் மற்றொரு போட்டி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: CSK vs SRH: சென்னைக்கு 4ஆவது தோல்வி... ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.