மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிராவில் நடந்துவருகிறது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 16 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப்ரல் 9) 17ஆவது லீக் ஆட்டம் டிஒய் படில் மைதானத்தில் நடக்கிறது.
இதில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி சென்னைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களான ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட் களம் காணுகின்றனர்.
முன்னதாக சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறுகையில், "நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்தோம். ஒரு சுழற்பந்து வீச்சாளராக நான் அதைத்தான் விரும்புவேன். பேட்டிங்கிற்கு தயாராக உள்ளோம்" என்றார்.
மறுப்புறம் எஸ்ஆர்ஹெச் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், "நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்யவே பரிசீலித்தோம். ஏனென்றால் இந்த ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன் அணியில் கைகோர்த்துள்ளனர்" என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்.எஸ். தோனி (கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
இதையும் படிங்க: PBKS vs GT: திகில் காட்டிய திவாட்டியாவால் திவாலானது பஞ்சாப்!