ETV Bharat / sports

IPL 2021: ஹைதராபாத் திணறல்; டேபிள் டாப்பர் ஆகுமா டெல்லி - KANE WILLIAMSON

டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்துள்ளது.

IPL 2021
IPL 2021
author img

By

Published : Sep 22, 2021, 10:00 PM IST

துபாய்: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 33ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று (செப். 22) மோதுகின்றன.

வார்னர் வாக்-அவுட்

இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, டேவிட் வார்னர் - சாஹா ஜோடி களம் கண்டது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு டி20 போட்டியை ஆடும் டேவிட் வார்னர், இப்போட்டியில் டக்-அவுட்டாகி வெளியேறினார். சாஹா, கேப்டன் வில்லியம்சனுடன் நிதானம் காட்டிவந்த நிலையில், ராபாடா வீசிய முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார்.

வில்லியம்சன் வெளியேற்றம்

இதன்பின்னர், சாஹா வேகமெடுப்பார் என நினைத்த வேளையில், அதே ஓவரின் கடைசிப் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து 18 (17) ரன்களில் வெளியேறினார். டெல்லி அணி பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீச வில்லியம்சன், மணீஷ் பாண்டே ஆகியோர் களத்தில் இருந்தாலும் ரன்ரேட் உயரவே இல்லை.

அஸ்வின் வீசிய ஒன்பதாவது ஓவரில், வில்லியம்சன் கொடுத்த எளிமையான கேட்சை ரிஷப் பந்த் தவறவிட்டார். அக்சர் படேலின் அடுத்த ஓவரின் ஐந்தாம் பந்தில் வில்லியம்சன் பிருத்வி ஷாவிடம் கொடுத்த கேட்ச்சும் மிஸ்ஸானது.

இரண்டு முறை நூலிழையில் தப்பித்த வில்லியம்சன், அக்சர் படேலின் அடுத்த பந்தை தூக்கி அடிக்க முயற்சித்தார். ஆனால், இம்முறை அந்த கடினமான கேட்ச்சை ஹெட்மயர் எளிதாகப் பிடித்து, வில்லியம்சனை 18 (26) ரன்களில் வெளியேற்றினார்.

காப்பாற்றிய ரஷித் - சமத்

பின்னர், ரபாடா வீசிய 10ஆவது ஓவரின் முதல் பந்தில் மணீஷ் பாண்டே 17 (16) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த கேதார் ஜாதவ் 3 (8) ரன்களிலும், ஹோல்டர் 10 (9) ரன்களிலும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.

இதையடுத்து, அப்துல் சமத், ரஷித் கான் சற்று ரன் வேகத்தைக் கூட்டினர். கடைசி ஓவர்களில் அப்துல் சமத் 28 (21) ரன்களிலும், ரஷித் கான் 22 (19) ரன்களிலும் வெளியேற, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இந்தப் போட்டியை வெல்லும்பட்சத்தில் முதலிடத்திற்கு முன்னேறும்.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்; ஜெயிச்சாலும் பிரச்சனை தான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.